Home சினிமா கவினை செருப்பால அடிச்சிருக்கணும்...! ஆவேசமான தயாரிப்பாளர்!

கவினை செருப்பால அடிச்சிருக்கணும்…! ஆவேசமான தயாரிப்பாளர்!

பிக் பாஸ் வீட்டில் அடுத்த பதினைந்து நாட்களுக்கு இன்னும் என்ன என்ன திருப்பங்கள் எல்லாம் நடக்க இருக்கிறதோ? நாளுக்கு நாள் பரபரப்பைக் கூட்டி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்தது தான் தற்போது பூகம்பமாக வெடித்துள்ளது. கவின் விஷயத்தில் லாஸ்லியா நடந்து கொண்ட விதத்தால் கடுப்பான லாஸ்லியாவின் தந்தை, என்னை அனைவரும் காரிதுப்பும்படி செய்து விட்டாய் என்று லாஸ்லியாவைக் கடுமையாக பேசி இருந்தார்.

libra producer ravindhran about kavin

லாஸ்லியாவின் தந்தை மட்டுமல்ல லாஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கைகள் கூட, கவினிடம் நீ பழகுவதை நிறுத்து. உன்னுடைய விளையாட்டை நீ விளையாடு என்று அறிவுறுத்தினார்.  இருப்பினும் இறுதியில் வீட்டை விட்டு செல்லும் முன்னர் கவினை கட்டி அணைத்து எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் உன் கேமை விளையாடுங்க என்று கூறினார் லாஸ்லியாவின் தந்தை.  அதே போல லாஸ்லியாவிடமும் இனி நீ ஆரம்பத்தில் எப்படி இருந்தாயோ அப்படி இரு என்று லாஸ்லியாவிற்கு அறிவுரை அளித்து விட்டு சென்றார் லாஸ்லியாவின் தந்தை. 

இது ஒரு புறம் இருக்க ஃப்ரீஸ் டாஸ்கில் கவினை சந்திக்க அவரது நண்பரும், அருவி பட நடிகருமான பீட்டர் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். பிக்பாஸ் ப்ரோமவில், கவினை சந்தித்த கவினின் நண்பர் பீட்டர், இவ்வளவு கேவலமாக ஆடிய கேமிற்கும், மட்டமாக நீ செய்த விஷயத்திற்கும், மற்றவர்களை நோகடித்தற்கும் உன்னை அறைய வேண்டும் என்று கவின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். 

இந்த ப்ரோமோ ரசிங்கர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் கவினை வைத்து ‘நட்புன்னா என்ன தெரியுமா’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ரவீந்திரனிடம் இந்த ப்ரோமோ குறித்து கேட்கப்பட்ட போது, கவின் லொஸ்லியா அப்பா, அம்மா வந்த போது “நான் இதெல்லாம் நினைத்து பார்க்கவில்லை என்று சொல்கிறார். அப்போ அவர் என்ன, மாமா வாங்க, மருமகனே எப்படியிருக்கீங்க என்று கேட்பார்கள் என்று எதிர்ப்பார்த்தாரா?, நியாயமாக பார்த்தால் கவினை சும்மா எல்லாம் அடிச்சிருக்க கூடாது. கவினுக்கு செருப்படி விழுந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கரூர் அருகே குளத்தில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு

கரூர் கரூர் அருகே குளத்தில் குளித்த அண்ணன், தம்பி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டம்...

‘சசிகலாவிடம் இருந்து தப்பிக்க முதல்வர் டெல்லி பயணம்’ : மு.க ஸ்டாலின் விமர்சனம்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியுடனான எதிர்க்கட்சியின் மோதல் நாளுக்கு நாள் வலுக்கிறது. தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை அதிமுக உறுதிப்படுத்தியிருக்கும்...

“புருஷன கொஞ்சாம போன்லெ யாரை கொஞ்சுறே” -போன் பேசிய மனைவிக்கு நேர்ந்த நிலை

ஒரு மனைவி எந்நேரமும் போனில் பேசிக்கொண்டிருந்ததால் சந்தேகப்பட்ட கணவன் அவரை கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்தது கர்நாடகாவின்...

இலங்கையில் கோயில் இடிப்பு : வைகோ கண்டனம்!

இலங்கையில் ஆதிசிவன் ஐயனார் கோயில் உடைக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் இலங்கை ராணுவ உதவியுடன் ஆலய சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர்...
Do NOT follow this link or you will be banned from the site!