கவலைப்படாதீங்க.. மகாராஷ்டிராவில் பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி ஆட்சிதான்… அமித் ஷா தகவல்

கவலைப்படாதீங்க, மகாராஷ்டிராவில் பா.ஜ.க.-சிவ சேனா தலைமையிலான அரசுதான் அமையும் என தன்னிடம் அமித் ஷா கூறியதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. ஆனால் முதல்வர் பதவியை 2.5 ஆண்டுகள் விட்டு கொடுத்தால்தான் ஆதரவு கொடுப்போம் என சிவ சேனா கோரிக்கை வைத்தது. ஆனால் பா.ஜ.க. அதனை ஏற்க மறுத்து விட்டது. மேலும் ஆட்சி அமைக்கவும் பா.ஜ.க. உரிமை கோரவில்லை.

பகத் சிங் கோஷ்யாரி

இந்நிலையில் கடந்த சட்டப்பேரவையின் காலம் முடிவடைந்ததால் அதிக இடங்களை வென்ற பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க வருமாறு அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். ஆனால் பெரும்பான்மை இல்லை என்று பா.ஜ. கூறிவிட்டது. இதனையடுத்து சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். ஆனால் அந்த கட்சிகள் கூடுதல் அவகாசம் கேட்டன. இதனையடுத்து அம்மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு கவர்னர் பரிந்துரை செய்தார். தற்போது அங்கு குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது.

ராம்தாஸ் அத்வாலே

இதற்கிடையே சிவ சேனா தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான வேளைகளில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலை செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கான மத்திஸ்த வேளைகளில் நீங்கள் ஈடுபட்டால் ஒரு வழி கிடைக்கும் என அமித் பாயிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் கவலைப்படாதீங்க, எல்லாம் நல்லா போயிட்டு இருக்கு, மகாராஷ்டிராவில் பா.ஜ.க.-சிவ சேனா தலைமையிலான கூட்டணி அரசுதான் அமையும் என கூறினார் என தெரிவித்தார்.
 

Most Popular

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

இன்றைய ராசிபலன்கள் 12-08-2020 (புதன்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரையில் மாலை 4.45 முதல் 5.45 வரையில் ராகு காலம் :  காலை 12.00 மணி முதல் 1.30 வரையில் எமகண்டம் : காலை 7.30...

கிருஷ்ணர் இன்று ஜெயிலில் பிறந்தார், உங்களுக்கு பெயில் அல்லது ஜெயில் எது வேண்டும்? எஸ்.ஏ.பாப்டே நகை்சுவை

நீதிமன்றங்கள் எப்போதும் மிகவும் வழக்குகளால் மிகவும் சீரியஸாக இருக்கும். அதேசமயம் சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறும். அதற்கு உதாரணமாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு சம்பவம் நடந்தது. கொலை வழக்கில்...

எனக்கு என்னவோ அவங்க 2 பேரும் மேலயும் சந்தேகம் இருக்கு… சச்சின், கெலாட் சேர்ந்தது குறித்து மாயாவதி

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியல்...

பா.ஜ.க. அரசின் மோசடிகள் ஹரியானாவை திவால் நிலைக்கு தள்ளுகின்றன… காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஹரியானாவின் எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா செய்தியாளர்கள் சந்திப்பின்போது, முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் ஊழல்கள் மாநிலத்தை திவால் நிலைக்கு தள்ளுவதாக குற்றம் சாட்டினார்....
Do NOT follow this link or you will be banned from the site!