Home குற்றம் உள்ளூர் கள்ளக்காதல் விவகாரம்: உப்புமாவில் விஷம் வைத்து மனைவியை கொன்ற கணவன் கைது!

கள்ளக்காதல் விவகாரம்: உப்புமாவில் விஷம் வைத்து மனைவியை கொன்ற கணவன் கைது!

குமரி மாவட்டம் தக்கலை அருகே உப்புமாவில் விசம் வைத்து கல்லூரி பேராசிரியை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தக்கலை அருகே உப்புமாவில் விசம் வைத்து கல்லூரி பேராசிரியை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

குமாி மாவட்டம் மேக்காமண்டபம் வியன்னூா் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தாா் ஜான் அலெக்சாண்டாின் மகள் திவ்யா சில்வெஸ்டா்(29) கருங்கலில் தனியாா் கல்லூாியில் பேராசிாியராக பணிபுாிந்து வந்தாா். இவருக்கும் வெள்ளிகோடு பகுதியை சோ்ந்த பெல்லாா்மினுக்கும் 5 மாதம் முன்பு  திருமணம் நடந்தது. பெல்லாா்மின் மாா்த்தாண்டத்தில் உள்ள ஓரு பொறியியல் கல்லூாியில் பேராசிரியராக பணிபுாிந்து வருகிறார். 

பெல்லாா்மின் அதே கல்லூாியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வருகிறாா். இது மனைவி திவ்யா சில்வெஸ்டா்க்கு தொியவர அவா் கணவனை கண்டித்துள்ளாா். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. மேலும் பெல்லாா்மின் நான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்ய போகிறேன் என அடிக்கடி திவ்யா விடம் கூறிவந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலை திவ்யாவுக்கு உப்புமா மற்றும் குளிர்பானத்தை பெல்லார்மின் பாசமாக கொடுத்துள்ளார். அதனைச் சாப்பிட்ட திவ்யா, மீதமுள்ளதைத் தனது வீட்டு நாய்க்கும் வைத்துள்ளார். 

இதற்கிடையே, உணவருந்திய சிறிது நேரத்தில் திவ்யாவுக்கு ரத்த வாந்தி வந்துள்ளது. உடனடியாக பெல்லார்மின் மற்றும் அவரது பெற்றோர்களை திவ்யா உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் யாரும் உதவிக்கு வராததையடுத்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து திவ்யாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், பெல்லார்மின் மற்றும் அவரது பெற்றோர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் திவ்யா கொடுத்த இறுதி வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்தே அவரது கணவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சசிகலாவுக்கு வைரஸ் பாதிப்பின் தன்மை குறைந்துள்ளது- மருத்துவமனை அறிக்கை

முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, பெங்களூருவிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை காலம் முடிவடைந்ததால் அவர், சிறையிலிருந்து ஜனவரி மாதம் 27ஆம் தேதி...

வரும் 26ஆம் தேதி திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 26 ஆம் தேதி 12 மணிக்கு ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய...

32 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளோம்- முதல்வர் பழனிசாமி

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துறையாடலில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி,...

முதலீட்டாளர்களை ஏமாற்றிய இந்த வார பங்கு வர்த்தகம்.. 5 தினங்களில் சென்செக்ஸ் 156 புள்ளிகள் சரிவு..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. சென்செக்ஸ் 156 புள்ளிகள் குறைந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரத்தின்...
Do NOT follow this link or you will be banned from the site!