கள்ளக்காதல் விவகாரத்தை கணவரிடம் கூறியதால் மகளை கொன்ற தாய்: உண்மை நிலவரம்?

தன்னுடைய கள்ளக்காதல் விவகாரத்தைக் கணவரிடம் கூறியதால் மகளை கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம்: தன்னுடைய கள்ளக்காதல் விவகாரத்தைக் கணவரிடம் கூறியதால் மகளை கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் மாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷங்கர்  இவருக்குப் பிரியங்கா காந்தி என்ற மனைவியும்,  ஷிவானி என்ற மகளும் உள்ளனர். விவசாயியான ஷங்கர்  இவர் சில  ஆண்டுக்கு முன்பு சிங்கப்பூருக்கு சென்று வேலைபார்த்து வருகிறார்.  

இதனால் பிரியங்கா காந்தி, தனது மகளுடன் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இலுப்பநத்தம் கிராமத்தில் தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இரு தினங்களுக்கு முன்பு  பிரியங்கா காந்தியும், மகள் ஷிவானியும்  60 அடி ஆழ விவசாய கிணற்றில்  தத்தளித்தார்.

இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து கிணற்றில் இருந்து பிரியங்கா காந்தியை உயிருடனும், ஷிவானியை பிணமாகவும் மீட்டனர். தொடர்ந்து போலீசார் பிரியங்கா காந்தியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொள்ளையர்கள் பணத்தை பறித்துக்கொண்டு, சிறுமியை கிணற்றில் வீசி கொன்று விட்டு சென்றதாக தெரிவித்தார்.

இதில் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், பிரியங்கா காந்தி மகளை தான்தான் கொன்றேன் என்று உண்மையை ஒப்புக்கொண்டார். இது குறித்து அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் வெங்கடேஷ் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.  கடந்த 24-ந்தேதி மகளுடன் வெங்கடேஷ் வீட்டுக்கு சென்றேன். அப்போது வெளிநாட்டில் இருந்து போன் செய்த எனது கணவர் ஷங்கரிடம், எனது மகள் ஷிவானி எனது கள்ளக்காதல் விவகாரத்தைக் கூறி விட்டாள். எனவே அவளை கிணற்றில் வீசி கொன்று விட்டு, நானும் கிணற்றில் குதித்து கொள்ளையர்கள் தள்ளி விட்டதாக நாடகமாடினேன்’ என்றார். இதனையடுத்து பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது .

Most Popular

‘எஸ்.வி சேகரை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை’.. அமைச்சர் காமராஜ் பேட்டி

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு அளித்தும் முதல்வர் பழனிசாமியை விமர்சித்தும் எஸ்.வி சேகர் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் உங்கள் கட்சிக்கு அம்மா திராவிட...

“50 லட்சத்தை 25லட்சமாக குறைத்து முன்களப் பணியாளர்களின் தியாகத்தை சிறுமைப்படுத்தாதீர்கள் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை பணயம் வைத்து உழைத்து கொண்டிருக்கும் முன்கள பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அளிக்கப்படும் என...

செப்டம்பர் முதல் பள்ளிகளைப் படிப்படியாகத் திறக்க மத்திய அரசு திட்டம்!

செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக பள்ளிகளைத் திறப்பது பற்றிய வழிகாட்டுதல்களை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் தினசரி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 50 ஆயிரம் கடந்து சென்று...

குழந்தைகள் மொபைலைப் பார்ப்பதை விட டிவி பார்ப்பது நல்லதுதா? #ParentingTips

கொரோனா காலத்தில் பெற்றோருக்கு இரண்டு கடும் பிரச்னைகள். ஒன்று வெளியில் சென்று பொருட்களை வாங்கச் செல்வது. ஏனெனில், அப்படிச் செல்லும்போது கொரோனா நோய்க் கிருமிகள் அவர்களைத் தொற்றிவிடக்கூடாது என்ற கவலை. அடுத்த பிரச்னை......