கள்ளக்காதலி வீட்டில் இருந்த கணவரை கையும் களவுமாக போலீசில் பிடித்து கொடுத்த மனைவி!

கணவர் மற்றும் அவரது கள்ளக்காதலியையும்  பெண் ஒருவர்  கையும்  களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹைதராபாத்: கணவர் மற்றும் அவரது கள்ளக்காதலியையும்  பெண் ஒருவர்  கையும்  களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹைதராபாத்தின் கொட்ட கொம்மு கூடம் பகுதியை சேர்ந்தவர் லஷ்மன். இவருக்கும்  சுஜன்யா   என்பவருக்கும்  2 ஆண்டுகள் முன்பு திருமணம் நடந்துள்ளது.  இதையடுத்து லஷ்மனுக்கு கூக்கட்பள்ளியில் உள்ள அனுஷா என்கிற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சுஜன்யா லஷ்மனிடம் தகராறு செய்துள்ளார். ஒருகட்டத்தில் கள்ளக்காதலி அனுஷா வீட்டுக்கு சென்ற லஷ்மன்  மீண்டும் வீடு திரும்பாமல் அனுஷாவுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். 

love

இதனால் வேதனையடைந்த சுஜன்யா,  லஷ்மனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதற்கும் லஷ்மனிடம் இருந்து பதில் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுஜன்யா, கணவரின் கள்ளக்காதலியான அனுஷா வீட்டுக்கு சென்று கணவன் மற்றும் அனுஷாவை பிடித்து வெளுத்து வாங்கியுள்ளார்.  தொடர்ந்து போலீசிடம் அவர்களை கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்துள்ளார். 

இதையடுத்து லஷ்மன்  மீது முதல் மனைவி இருக்கும் போதே வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தது, விவாகரத்து நோட்டீஸுக்கு பதில் கூறாமல் இருந்தது உள்ள குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கணவரை நினைத்து அழுது கொண்டிருக்காமல், அதிரடியாகக் களத்தில்  இறங்கி போலீசில் பிடித்து கொடுத்த சுஜன்யாவை அங்குள்ளவர்கள் பாராட்டி வருகின்றனர். 
 

Most Popular

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று விவரம் இதோ!

தமிழகத்தில் கொரோனா பரவலால் இதுவரை ஒட்டுமொத்தமாக 2.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்றும்...

வழிந்தோடிடும் ரத்தமும் ,கிழிந்து தொங்கிய சதைகளுமாக -பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி வழக்கு -பெண்கள் உரிமை ஆணையம் போலீசுக்கு நோட்டீஸ்..

மேற்கு டெல்லியில் இரண்டு நாட்களுக்கு(ஆகஸ்ட்- 4) முன்பு 12 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றது தொடர்பாக டெல்லி பெண்கள் ஆணையம் (டி.சி.டபிள்யூ) வியாழக்கிழமை டெல்லி போலீசாருக்கு...

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை : ஆக.10ல் முதல்வர் அறிவிப்பார் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை...

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 30,000கன அடியாக அதிகரிப்பு!

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல், குற்றால அருவிகள் என பல்வேறு நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை...