Home இந்தியா கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்துவிட்ட மாமியார்...இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மருமகள்!

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்துவிட்ட மாமியார்…இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மருமகள்!

அவரிடம் தொடர்ந்து நடத்திய கிடுக்குபிடி விசாரணையில், சவுந்தர்யா தான் மாமியார் ராஜம்மாளை கொன்றது அம்பலமானது.

பெங்களூரு பேடராயனபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ராஜம்மா.  இவர் கடந்த 19 ஆம் தேதி வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகளும் திருடு போயிருந்தன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ராஜம்மாவின் மருமகள் சவுந்தர்யா மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரிடம் தொடர்ந்து நடத்திய கிடுக்குபிடி விசாரணையில், சவுந்தர்யா தான் மாமியார் ராஜம்மாளை கொன்றது அம்பலமானது.

 

ttn

அதாவது,  ராஜம்மாவின் மகன் குமாருக்கும் சவுந்தர்யாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த இவர் தனது உறவினருக்கு போன் செய்வதற்கு பதிலாக தவறாக வேறு நபருக்கு கால் செய்துள்ளார்.  இதையடுத்து சவுந்தர்யா போனை துண்டித்துவிட்டார். ஆனால் மீண்டும் அந்த அழைப்பிலிருந்து  நவீன் ஜடேசுவாமி என்பவர் பேசியுள்ளார். நவீனின் பேச்சில்  மயங்கிய சவுந்தர்யா தொடர்ந்து போனில் பேசி நட்பை வளர்த்துவர சின்ஹா உறவானது ஒருகட்டத்தில் கள்ளகாதலாக மாறியுள்ளது. இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சவுந்தர்யா நவீனை அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். 

tn

அதன்படி சம்பவத்தன்று சவுந்தர்யா மாமியார் வெளியூர்  சென்றுவிட, கணவர் குமார் வேலைக்கு  சென்றுள்ளார். இதனால் நவீனுக்கு போன் செய்து வீட்டிற்கு அழைத்துள்ளார் சவுந்தர்யா. அப்போது வீட்டிற்கு வந்த நவீனுடன் சவுந்தர்யா உல்லாசமாக இருக்க அந்த நேரத்தில்  ராஜம்மா திடீரென வீட்டிற்கு வந்துள்ளார். சவுந்தர்யா மற்றும் அவரது  கள்ளக்காதலனை  பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து ராஜம்மா, தனது மருமகளையும், அவருடைய கள்ளக்காதலனையும் கடுமையாக கண்டித்து, சரமாரியாக திட்டியுள்ளார்.

ttn

இதுகுறித்து மகனிடம் சொல்ல போவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சவுந்தர்யா  நவீனும் சேர்ந்து ராஜம்மாவை சரமாரியாக அடித்து, உதைத்ததுடன்,  வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் ராஜம்மாவின் தலையில் சரமாரியாக தாக்கினர்.இதில் ராஜம்மா சம்பவ இடத்திலேயே பலியானார். பின்பு  நகைக்காக கொலை சித்தரித்து நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் சவுந்தர்யாவையும், அவருடைய கள்ளக்காதலன் நவீனையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

அண்ணாத்த ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ரஜினியின் 168 வது திரைப்படத்திற்கு அண்ணாத்த என்று பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தை  சன் பிக்சர்ஸ் தயாரித்துவருகிறது.  இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி,...

போராட்டம்னு வந்துட்டா… பேரணியில் சிங்க நடை போடும் பாட்டி!

வேளாண் சட்டங்களை எதிர்த்து நாசிக்கிலிருந்து மும்பை நோக்கிய விவசாயிகள் பேரணியில் மூதாட்டி ஒருவர் கம்பீரமாக நடந்துவரும் வீடியோ வைரலாகியிருக்கிறது. இளைஞர்களைக் காட்டிலும் முதியவர்களின் போராட்டக்குணம் சற்றே...

‘திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி; ஸ்டாலின் தான் அதுக்கு சேர்மேன்’ – முதல்வர் கடும் விமர்சனம்!

திமுகவில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாரும் ஆட்சி பொறுப்பிற்கு வர முடியாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். கள்ளக்குறிச்சியில் மொழிப்போர் தியாகிகள் தின நாளில்...

குடியரசு தலைவர் திறந்தது நேதாஜி படமா? நேதாஜி ரோலில் நடித்தவரின் படமா?

குடியரசு தலைவர் திறந்துவைத்தது நேதாஜியின் படமா அல்லது கும்னாமி என்ற திரைப்படத்தில் நேதாஜியாக நடித்தவரின் படமா என்ற விவாதம் ட்விட்டரில் எழுந்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர்...
Do NOT follow this link or you will be banned from the site!