Home தமிழகம் களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் கொலை...போலீசாருக்கு கிடைத்த புதிய தகவல்!

களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் கொலை…போலீசாருக்கு கிடைத்த புதிய தகவல்!

அம்மாவட்ட ஆட்சியர்  மு வடநேரே, டிஜிபி திரிபாதி ஆகியோர்  நேரில் வந்து விசாரணை நடத்தினர்.  

களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் கொலை...போலீசாருக்கு கிடைத்த புதிய தகவல்!

கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழக – கேரள எல்லையின் களியக்காவிளை பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில்   சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் வில்சன். இவர்  கடந்த 8 ஆம் தேதி வழக்கம் போல பணியிலிருந்த நிலையில், இரவு 9.45 மணியளவில் அப்பகுதி வழியாக நடந்து வந்த இரண்டு  இளைஞர்கள்  அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதுகுறித்து நடத்திய விசாரணையில் துப்பாக்கி குண்டுகள் வில்சனின் தலை, மார்பு, கால் ஆகிய பகுதிகளில் குண்டுகள் பாய்ந்திருப்பது தெரியவந்தது.  சம்பவ இடத்துக்கு அம்மாவட்ட ஆட்சியர்  மு வடநேரே, டிஜிபி திரிபாதி ஆகியோர்  நேரில் வந்து விசாரணை நடத்தினர்.  

 

வில்சன்  சுட்டுக்கொலை

இதை தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த  தவுபீக், ஷமீம் என்ற இளைஞர்கள் இருவர்  வில்சனை சுட்டுவிட்டு  பள்ளிவாசல் வழியாக தப்பிச்சென்றது தெரிந்தது. கொலையாளிகள் பயன்படுத்தியது 7.65 எம்.எம். ரக கள்ளத் துப்பாக்கி ஆகும். இதனிடையே வில்சனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு 21 குண்டுகள் முழங்க அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. வில்சனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் , அவர் உடலில் குண்டுகள்  பாய்ந்ததோடு, கத்தியால்  இடுப்பு பகுதியில் குத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.  இதனால் தப்பியோடிய இருவரையும் தமிழ்நாடு மற்றும் கேரள போலீசார் போலீசார் தீவிரமாக தேடி  வருகின்றனர். இருவரில் ஒருவரது வீட்டில் அண்மையில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது என்றும் போலீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

 

ttn

இதனிடையே தமிழ்நாடு – கேரள எல்லைப்பகுதி சாலைகளில் வைக்கப்பட்டுள்ள ரகசிய கேமராவை ஆய்வு செய்தபோது, குற்றவாளிகள் இருவரும் நெய்யாற்றின் கரை வழியாக கேரளாவுக்கு நடந்துசென்றது தெரியவந்துள்ளது. அவர்கள் கையில் கருப்பு பை  இருப்பது போலவும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. 

 

ttn
 

இந்நிலையில் தவுபிக், ஹமீம் ஆகியோருடன் தொடர்பிலிருந்ததாகத் தமிழ்நாடு, கேரளாவில்  சேர்ந்த சிலரிடம் போலீசார், விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் கொலை...போலீசாருக்கு கிடைத்த புதிய தகவல்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“கட்சிகளுக்கு புதிய சின்னங்களை ஒதுக்குவது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்”

ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பதில்...

ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

கொரொனா பரவலால் தமிழக பள்ளி, கல்லூரி மானவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

’’பொய் சொன்னா அறைவேன் என்று சொன்ன நடிகர் சித்தார்த் எங்கே?’’

16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கியது. புதிய ஆசி பொறுப்பேற்ற பின்னர் நடைபெறம் இந்த முதல் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையில் இடம்பெற்றிருப்பது குறித்து...

தளபதி 65 படத்தின் தலைப்பு அறிவிப்பு

நடிகர் விஜய் 65வது படத்தின் First Look வெளியானது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது...
- Advertisment -
TopTamilNews