Home தமிழகம் கல்லால் அடித்து கணவனை கொன்ற மனைவி: கள்ளகாதலனோடு சேர்ந்து செய்த கொடூரம்!

கல்லால் அடித்து கணவனை கொன்ற மனைவி: கள்ளகாதலனோடு சேர்ந்து செய்த கொடூரம்!

மனைவியை கணவரைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய  போலீசார்  கைது செய்துள்ளனர்.

கல்லால் அடித்து கணவனை கொன்ற மனைவி: கள்ளகாதலனோடு சேர்ந்து செய்த கொடூரம்!

கிருஷ்ணகிரி : மனைவியே  கணவரைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய  போலீசார்  கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி  மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரன். இவர் தனது முதல் மனைவியை பிரிந்து இரண்டாவது மனைவி விஜயம்மாவுடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லாத நிலையில், ஈஸ்வரன் குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனிடையே ஈஸ்வரன் அதேபகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவருக்கு 5லட்சம் கடனாக கொடுத்துள்ளார். இதனால் அடிக்கடி ஈஸ்வரன் வீட்டுக்கு சத்தியமூர்த்தி வந்து செல்கையில் விஜயம்மாவுக்கும் சத்தியமூர்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களின் கள்ளக்காதல் குறித்து ஈஸ்வரனுக்கு தெரியவர, சத்தியமூர்த்தியிடம் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதோடு மனைவியையும்  துன்புறுத்தி வந்துள்ளார்.

murder

இதனால் ஆத்திரமடைந்த  விஜயம்மா – சத்தியமூர்த்தி இருவரும் ஈஸ்வரனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். பின்னர் கடந்த 20 ஆம் தேதி சத்தியமூர்த்தி பணம் தருவதாக ஈஸ்வரனை அழைத்துச் சென்று அவருக்கு மது வாங்கிக் கொடுத்துள்ளார்.  போதை  தலைக்கேறியதும் இருவரும் சேர்ந்து கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். இதையடுத்து அடையாளம் தெரியாதவாறு முகத்தைச் சிதைத்து ஆந்திர மாநில  வனப்பகுதியில் வீசியுள்ளனர். 

murder

இதை தொடர்ந்து எதுவும் தெரியாதது போல  ஈஸ்வரனைக் காணவில்லை என விஜயம்மாவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,விஜயம்மாவிடம் நடத்திய விசாரணையில் ஈஸ்வரனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனிடையே வனப்பகுதியிலிருந்த ஈஸ்வரன் உடலை போலீசார் கைப்பற்றினர். 

இதையடுத்து சத்தியமூர்த்தி – விஜயாம்மா இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது. 

கல்லால் அடித்து கணவனை கொன்ற மனைவி: கள்ளகாதலனோடு சேர்ந்து செய்த கொடூரம்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ஆக்சிஜன் தட்டுப்பாடு.. நள்ளிரவில் களமிறங்கி நடவடிக்கை எடுத்த அமைச்சர், எம்.பி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பரவலாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் நேற்று இரவு...

விழுப்புரம் மாவட்ட கர்ப்பிணி காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை – எஸ்.பி. ஆணை!

விழுப்புரம் விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் கர்ப்பிணி காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்கி மாவட்ட எஸ்.பி., ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். தமிழகம் முழுவதும்...

மறு உத்தரவு வரும் வரை… கீழமை நீதிமன்றங்கள் இயங்காது!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும்...

“எனக்கு கொரோனா பணி தான் முக்கியம்” – மருத்துவமனை டீன்களை மாற்றி முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 159 இடங்களில் அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலே அதிகார மட்டத்திலும்...
- Advertisment -
TopTamilNews