Home சினிமா கலாய்க்கும் நெட்டிசன்கள் – “தல” ரசிகர்கள் பதிலடி!

கலாய்க்கும் நெட்டிசன்கள் – “தல” ரசிகர்கள் பதிலடி!

தல 59வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கலாய்த்து வரும் நெட்டிசன்களுக்கு அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

தல 59வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கலாய்த்து வரும் நெட்டிசன்களுக்கு அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கி வரும் அஜித்தின் 59வது படத்திற்கு “நேர்கொண்ட பார்வை” என தலைப்பு வைக்கப்பட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சில தினங்களுக்கு முன் படக்குழு வெளியிட்டது. இப்படம் பாலிவுட்டில் பெரிதும் வெற்றிபெற்ற “பிங்க்” திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அமிதாப்பச்சன் கேரக்டரில் அஜித் நடித்து வருகிறார். டாப்ஸி கேரக்டரில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இந்தியில் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை போலவே, தமிழிலும் வெளியிட்டுள்ளனர் என்று கூறி, சமூக வலைதளங்களில் ஃபர்ஸ்ட் லுக்கை ட்ரோல் செய்தும், மீம்ஸ் போட்டும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். படத்தின் தலைப்பை “நேர்கொண்ட பார்வை” வைத்துக்கொண்டு இப்படி காப்பியடிக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பினர். இதை கண்டு பொறுக்க முடியாத அஜித் ரசிகர்கள் ரீமேக் உரிமை பெற்றே படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் காபி அடிப்பதற்கு ஒன்றுமில்லை என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.

விஸ்வாசம் படத்தின் மெகா ஹிட்டிற்கு பிறகு, அஜித் நடித்து வரும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் வித்யாபாலன் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். தீனா, பில்லா, மங்கத்தா ஆகிய படங்களுக்கு இசையமைத்த  அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைப்பது படத்திற்கு (குறிப்பாக பின்னணி இசை) கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

“கிரௌண்டில் கட்டி உருண்ட காதலர்கள் ,ஜீப்பில் அலைந்த காவலர்கள்” -காதலி விட்ட கட்டு கதையால் நேர்ந்த நிலை

காதலனுடன் இரவு முழுவதும் உல்லாசமாக இருந்த பெண், தன்னுடைய பெற்றோருக்கு பயந்து தன்னை வாலிபர் கூட்டம் பலாத்காரம் செய்ததென்று பொய் சொன்னதால் அந்த காதலனை...

‘தொடர்ந்து ஒரு வாரமாக தங்கம் விலையில் வீழ்ச்சி’ – இன்றும் குறைவு!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. பொதுமுடக்கத்தின் போது தங்கக் காசுகளின் மீதான முதலீடுகள் அதிகரித்ததால், தங்கம் விலை கிடுகிடுவென ஏற்றத்தை சந்தித்தது. எதிர்பாராத...

அண்ணாமலையார் மகா தீபம்! – மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது மகா கொப்பரை!

கார்த்திகை மாதத்தில் முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மகா தீப நிகழ்வு நாளை நடைபெற உள்ளது. இதற்கான கொப்பரையை...

“இது சினிமா காட்சி அல்ல” : திருடர்களை சேஸிங் செய்து மடக்கிப் பிடித்த சப் – இன்ஸ்பெக்டர் : சென்னை கமிஷ்னர் பாராட்டு!

செல்போன் பறிப்பு கொள்ளையர்களை காவலர் ஒருவர் விரட்டி பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருசக்கர வாகனத்தில் வரும் திருடர்கள் சிலர், செல்போன் பறிப்பு, செயின்...
Do NOT follow this link or you will be banned from the site!