Home தமிழகம் கறுப்புக்கொடி போராட்டம்: வைகோ உள்ளிட்ட 403 பேர் மீது வழக்குப்பதிவு!

கறுப்புக்கொடி போராட்டம்: வைகோ உள்ளிட்ட 403 பேர் மீது வழக்குப்பதிவு!

பிரதமர் மோடிக்கு கருப்புக் காட்டியது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 403 பேர்  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பணகுடி: பிரதமர் மோடிக்கு கருப்புக் காட்டியது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 403 பேர்  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக நேற்று கன்னியாகுமரி வந்திருந்தார். மோடியின் தமிழக வருகையின் போது, கறுப்புக்கொடி போராட்டம் நடத்தும் வைகோ நேற்றும் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். முன்னதாக  நெல்லை – தூத்துக்குடி சந்திப்பான காவல் கிணற்றில் வைகோ தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ‘Gobackmodi’ என கருப்பு பலூன்களையும் வானில் பறக்கவிட்டனர்.

vaiko ttn

இதையடுத்து பா.ஜ.க.வினர் சிலர் கூட்டத்தில் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம்  ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.  கல்வீச்சில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர்,  வைகோ உள்ளிட்ட மதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

vaiko ttn

போராட்டம் தொடர்பாக 50 பெண்கள் உள்பட 450 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 403 பேர் மீது பணகுடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக கருப்பு கொடி போராட்டம் நடத்திய 50 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

மாவட்ட செய்திகள்

Most Popular

27 ஆம் தேதி வெளியே வரும் சசிகலாவால் ஆட்டம் காணப்போகிறார் எடப்பாடி- முக ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டம் – எடப்பாடி தொகுதிக்குட்பட்ட குரும்பப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

திராவிட இயக்கத்தை அசைத்து பார்க்க சிலர் முயற்சி ஆனால் இங்கு யாரும் நுழைய முடியாது- அமைச்சர் செங்கோட்டையன்

எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாளையொட்டி கே.கே.நகர் சிவன் பார்க் எதிரில் உள்ள பொப்பிளி ராஜா சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் முன்னாள் அமைச்சர், அமைப்பு...

வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ. மீது தாக்குதல்- தொழிலதிபர் கைது

கோவை கோவையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய தனியார் மில் உரிமையாளரை போலீசார் கைதுசெய்தனர். கோவை ஆர்.எஸ்.புரம்...

“சசிகலாவை விமர்சித்ததால் வளர்மதி ஆவேசம்! கலைஞர், ஸ்டாலின் மனைவி பற்றி பேசட்டுமா?”

எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாளையொட்டி கே.கே.நகர் சிவன் பார்க் எதிரில் உள்ள பொப்பிளி ராஜா சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்மற்றும் முன்னாள் அமைச்சர், அமைப்பு செயலாளர்,...
Do NOT follow this link or you will be banned from the site!