கர்ப்ப காலத்தில் ஃபிட்டாக இருப்பது எப்படி? சீக்ரெட் சொன்ன எமி ஜாக்சன்

நடிகை எமி ஜாக்சன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை எமி ஜாக்சன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதைத்தொடர்ந்து விக்ரம், விஜய், உதயநிதி, தனுஷ் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்த்தின் 2.0 திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். 

இவர் கடந்த ஜனவரி மாதம் தொழிலதிபர் ஜார்ஜ் பனையோத்துவை காதலிப்பதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து மார்ச் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். திருமணத்துக்கு முன்பு கர்ப்பமானதால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் எமி தனது கர்ப்ப கால புகைப்படங்களை வெளியிட்டு தன்னை எப்போதும் குஷியாகி வைத்துள்ளார்.  

இந்நிலையில் தற்போது ஒரு புதிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கர்ப்ப காலத்தில் அவர் எவ்வாறு ஆரோக்கியமாக இருக்கிறார் என்ற சீக்ரெட் பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ‘ கர்ப்பமடைவதற்கு முன்பே உடற் பயிற்சியில் நான் அதிகமாக ஈடுபடுவேன். அதுமட்டுமின்றி யோகா செய்வதன் மூலம் மன அழுத்தம் நீங்கிவிடும். கர்ப்ப காலத்தில் நீங்களும் இது போல் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்’ என்று   பதிவிட்டுள்ளார்.

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...