Home உலகம் கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை கடத்திய கொடூரம்: அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!?

கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை கடத்திய கொடூரம்: அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!?

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையைக் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிகாகோ: கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையைக் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா சிகாகோ நகரை சேர்ந்தவர்  ஒசாவோ லோபஸ். 19 வயதான இவர் கடந்த வருடம் திருமணம் ஆன ஒசாவோ, தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒசாவோவை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து போலீஸ் நடத்திய தேடலில் ஒசாவோ அவரது வீட்டின் அருகிலேயே பிணமாகக் கிடந்துள்ளார். ஆனால்  அவரது வயிற்றில் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. 

murder

இந்நிலையில் ஒசாவோவின் பிரேத பரிசோதனையில், அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதும், அவர் உயிருக்குப் போராடிய சமயத்தில் அவரின் வயிற்றைக் கிழித்து குழந்தை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

suicide

இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,  கர்ப்பிணி பெண்களுக்கு இலவச உடைகள் வழங்குவதாக முகநூலில் வந்த தகவலை அடுத்து ஒசாவோ  அதை வாங்கச் சென்ற சென்றபோது தான் அவர் காணாமல் போனதும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

மாவட்ட செய்திகள்

Most Popular

“இப்படியே போனா காங்கிரஸ இழுத்து மூட வேண்டியது தான்” – மனம் நொந்து பேசிய ப. சிதம்பரம்!

ஒருகாலத்தில் தமிழ்நாட்டை ஆண்ட ஒரு கட்சி இன்று திமுகவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது என சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பழ. கருப்பையா கூறினார். இது எந்தளவுக்கு உண்மை என்பதே...

மதிமுகவிற்கு 6 இடங்களை ஒதுக்கிய திமுக! உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு

தமிழக தேர்தலை முண்ணனி கட்சிகளான திமுகவும் அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. இருதரப்பிலுமே இறுதிமுடிவு எட்டப்படாமல் தொடர்ந்து இழுபறியாகவே சென்றுகொண்டிருக்கிறது. அதிமுகவுக்கு தேமுக...

கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி சிறுவன் பலி!

தென்காசி சங்கரன்கோவிலில் கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காமராஜர் நகரை...

பிரேக் ஃபாஸ்டா, மதிய உணவா… அதிக கலோரி உணவு எப்போது எடுப்பது சரியாக இருக்கும்?

இரவு உணவுக்கும் அடுத்த நாள் காலை பிரேக் ஃபாஸ்டுக்கும் இடையே மிக நீண்ட இடைவெளி. இரவு நாம் எடுத்துக்கொண்ட உணவில் இருந்து பெறப்பட்ட கலோரியைக் கொண்டு உடல் இரவு முழுக்க...
TopTamilNews