கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை… பரபரப்பான பின்னணி தகவல்கள்

கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த திமுக முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சிலையை திறந்து வைக்கிறார். அதன் பிறகு ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. அதில் கேரள முதல்வர் பினராயி  விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

இதற்கிடையே இந்த விழாவில் கலந்து கொள்ள மக்கள் நீதி மய்ய கட்சித்தலைவர் கமல்ஹாசன், மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள போவதாக ஏற்கனவே ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கமல்ஹாசன் கூறுகையில்,  கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட செல்வதால் விழாவில் பங்கேற்க முடியவில்லை என்றார்.

ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக-காங்கிரஸூடன் கூட்டணி வைக்கப்போகிறது. அதனை இன்று மாலை திமுகவோ, காங்கிரசோ பொதுக்கூட்டத்தில் வெளியிடும் என தகவல்கள் வெளியாகின. எனவே தற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இன்றைய கூட்டத்தை கமல் புறக்கணித்தார் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

Most Popular

அமெரிக்காவிலும் களைகட்டிய ராமர் கோயில் பூமிபூஜை கொண்டாட்டங்கள்!

அயோத்தி ராமர் கோயில் பூமிபூஜை விழாவை அமெரிக்காவிலும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர் அங்குள்ள இந்தியர்கள். அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 200 மத தலைவர்களுக்கு...

அண்ணாவின் கொள்ளுப்பேத்தி குடிமைப் பணி தேர்வில் வெற்றி – உதயநிதி வாழ்த்து

2019 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அதில் தேர்ச்சியானவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பால் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது....

புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் குடும்பத்துடன் தலைமறைவு!

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 286 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல் அதிகபட்சமாக ஒரே நாளில் 7பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 182 நபர்கள் புதுச்சேரியிலும், 21 பேர்...

மாப்பிள்ளை பிளஸ் டூ… மகள் இன்ஜினீயரிங்… காதல் திருமணத்தால் ஆத்திரம்!- அந்தஸ்தால் இளைஞரை கொன்று சாலையில் வீசிய பெண்ணின் தந்தை, தாய் மாமன்

பிளஸ் டூ படித்த காய் கறி வியாபாரியை இன்ஜினீயரிங் படித்து வரும் மகள் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் தந்தை, மாப்பிள்ளையை கொலை செய்துவிட்டு சாலையில் வீசி சென்ற...