Home இந்தியா கருணாநிதி சிலை திறப்பு விழா; கெஜ்ரிவாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

கருணாநிதி சிலை திறப்பு விழா; கெஜ்ரிவாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.

திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா வரும் 16-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருக்கிறது. இந்த சிலை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியால் திறக்கப்பட இருக்கிறது. மேலும், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர். மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று தேசிய தலைவர்களை சந்தித்து விழாவிற்கான அழைப்பிதழை வழங்கி வருகிறார்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்த மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கி விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார். முன்னதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரையும் அவர் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

பூந்தமல்லியில் காலேஜே இல்ல : அப்பல்லோ கல்லூரியிடம் பணத்தை இழந்த ஏழை மாணவி!

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சரண்யா என்ற மாணவி குடும்ப சூழல் காரணமாக பகுதி நேர வேலை செய்து கொண்டே படிக்க வேண்டும் என்று எண்ணி வந்துள்ளார். இதனால் அவர் அப்பல்லோ...

இருசக்கர வாகனத்துடன் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பெண் உட்பட 4 பேர் மீட்பு

திருவள்ளூர் சென்னை அடுத்த குன்றத்தூர் - ஶ்ரீபெரும்புதூர் சாலையில் இரவில் இருசக்கர வாகனத்துடன் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட ஒரு பெண் உட்பட 4 பேரை தீயணைப்பு வீரர்கள்...

2 கோடியை நெருங்குகிறது சிகிக்சை எடுப்போர் எண்ணிக்கை

டிசம்பர் 5-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம். உலகம்...

‘விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கியது திமுக’ : மாவட்ட தலைநகரங்களில் போராட்டம்!

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கட்சியினர், மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து 'டெல்லி சலோ' போராட்டத்தை...
Do NOT follow this link or you will be banned from the site!