Home அரசியல் கருணாநிதி சிலை திறப்பிற்கு சோனியாவுக்கு அழைப்பு

கருணாநிதி சிலை திறப்பிற்கு சோனியாவுக்கு அழைப்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்புக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்புக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து அவருக்கு திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு அருகிலேயே சிலை வைக்க முடிவெடுக்கப்பட்டது.

இதற்காக 8 அடி உயர கருணாநிதியின் சிலையை திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சிற்பி தீனதயாளன் உருவாக்கி வருகிறார். தற்போது இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால் சிலை திறப்பு நிகழ்ச்சி அடுத்த மாதம் (நவம்பர்) 15-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இந்த சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்தான் இந்த சிலையை திறந்து வைப்பார் என்றும் ஒருவேளை அவரால் திறந்து வைக்க முடியவில்லை எனில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிலையை திறந்து வைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மேலும் பல தேசிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“பேனர், பதாகைகளை அகற்றுங்கள்” – சென்னை மாநகராட்சி உத்தரவு!

நிவர் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதிகமாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு வசிக்கும் மக்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த புயல்...

மருமகனை கோவிலுக்குள் உயிருடன் எரித்துக்கொன்ற மாமனார் குடும்பம்

தெலுங்கானா மாநிலம் பால்வந்தபூர் மஞ்சுநாத் கோவிலுக்குள் இருந்து நேற்று முன் தினம் இரவு கரும்புகையும், மாமிசம் கருகும் வாடையும் வந்ததும் அப்பகுதியினர் அதிர்ச்சி்யில் குவிந்தனர். அங்கே...

கிருஷ்ணகிரி மருத்துவமனையில் பேரறிவாளன் : போலீஸ் பலத்த பாதுகாப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் மருத்துவ சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அழைத்து செல்லப்பட்டார். ராஜீவ் காந்தி...

“நிச்சயம் செய்துட்டு நிர்க்கதியாக்கிட்டு போயிட்டியே” கட்டிக்க மறுத்த பெண்ணை மிரட்டிய டாக்டர்.

ஒரு டாக்டரை நிச்சயம் செய்து விட்டு, திடீரென கட்டிக்க மறுத்த பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த டாக்டரை போலீஸ் தேடுகிறது .
Do NOT follow this link or you will be banned from the site!