Home சினிமா கமல்ஹாசன் வீட்டில் டும் டும் டும்..! காதலரை மணக்கிறார் ஸ்ருதிஹாசன்?

கமல்ஹாசன் வீட்டில் டும் டும் டும்..! காதலரை மணக்கிறார் ஸ்ருதிஹாசன்?

பிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் திருமணம் குறித்த வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சென்னை: பிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் திருமணம் குறித்த வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன், தமிழ் சினிமாவில் விஜய், அஜித், விஷால், சூர்யா உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும், சில பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

shrutihaasan

திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து இசை நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டி வரும் ஸ்ருதிஹாசன், ஐரோப்பாவைச் சேர்ந்த மைக்கேல் கோர்சல் என்பவரை காதலித்து வருகிறார். இந்த ஆண்டு ஸ்ருதிஹாசனுக்கும், மைக்கேல் கோர்சலுக்கும் திருமணம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவரது ட்வீட்டில், ‘நிஜமாவா? இது எனக்கு ஒரு செய்தி..’ என ட்வீட்டியுள்ளார். ஆகவே, ஸ்ருதிஹாசனுக்கு தற்போதைக்கு திருமணம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

shrutihaasan

மாவட்ட செய்திகள்

Most Popular

நாளை 166 இடங்களில் 19,073 சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் நாளை 166 இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் 160 இடங்களில் கோவிஷீல்டு மருந்துகளும் 6 இடங்களில் கோவேக்சினும் வழங்கப்பட உள்ளன.

“எம்ஜிஆா், ஜெயலலிதா போன்ற மனித நேயமிக்க தலைவா்கள் வரிசையில் எடப்பாடி பழனிச்சாமி”

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தில் சமுதாய கட்டிடத்திற்கு பூமிபூஜை செய்து கட்டிடப்பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்...

“2006 தேர்தலில் 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்படும் என்ற திமுகவின் அறிவிப்பு என்ன ஆனது?”

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, “அதிமுக இணைய வேண்டும் என்பது குருமூர்த்தி கருத்து, அதிமுக தனித்தன்மையுடன் இருக்கிறது. யார்...

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைத்துக்கொள்வது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்- புகழேந்தி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி அவரது இல்லத்திற்கு வருகை தந்தார்.
Do NOT follow this link or you will be banned from the site!