Home சினிமா கன்னட நடிகர் அம்பரீஷ் மரணம்: நண்பா உன்னை இழந்துவிட்டேன்: ரஜினிகாந்த் உருக்கமான பதிவு!

கன்னட நடிகர் அம்பரீஷ் மரணம்: நண்பா உன்னை இழந்துவிட்டேன்: ரஜினிகாந்த் உருக்கமான பதிவு!

கன்னட நடிகர் அம்பரீஷ் உடலுக்கு  அஞ்சலி செலுத்த அவரது நண்பரும் நடிகருமான ரஜினிகாந்த் பெங்களூரு செல்கிறார்.

சென்னை: கன்னட நடிகர் அம்பரீஷ் உடலுக்கு  அஞ்சலி செலுத்த அவரது நண்பரும் நடிகருமான  ரஜினிகாந்த் பெங்களூரு செல்கிறார்.

பிரபல கன்னட நடிகரும், முன்னாள் மத்திய மாநில அமைச்சருமான அம்பரீஷ், பெங்களூருவில் நேற்று இரவு காலமானார்.  சிறுநீரக நோய் காரணமாக, வெளிநாட்டில், சிகிச்சை பெற்று வந்த அம்பரீஷ் உடல்நிலை தேறிய நிலையில்  பெங்களூருவில் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு திடீரென்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு11 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

கன்னடத்தில் இருநூறு படங்களுக்கு மேல் நடித்துள்ள அம்பரீஷ், பிரியா, இது நிஜமா ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். நடிகை சுமலதாவின் கணவரான இவர் ரஜினியின் நெருங்கிய நண்பர் ஆவார். இந்நிலையில் அம்பரீஷின் மறைவுக்கு ரஜினி தன் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘நல்ல மனிதர், என்னுடைய நண்பர். இன்று உன்னை இழந்துவிட்டேன்’ என பதிவிட்டுள்ளார். மேலும் அம்பரீஷ்க்கு அஞ்சலி செலுத்த ரஜினி இன்று பெங்களூரு செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews