கத்தி திரைப்பட கதைக்கு நீதி கேட்ட இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி!

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய கத்தி திரைப்படத்தின் கதைக்கு உரிமை கோரி உண்ணாவிரதம் இருந்த இயக்குநர் அன்பு ராஜசேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை: ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய கத்தி திரைப்படத்தின் கதைக்கு உரிமை கோரி உண்ணாவிரதம் இருந்த இயக்குநர் அன்பு ராஜசேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கத்தி. இப்படத்தின் கதை தன்னுடையது என இயக்குநர் அன்பு ராஜசேகர் உரிமை கோரியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளவங்காடு கிராமத்தைச் சேர்ந்த அன்பு ராஜசேகர், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் உறவினர் ஆவார். விவசாயத்தை மையமாக வைத்து இவர் இயக்கிய ‘தாகபூமி’ என்னும் குறும்படத்தின் கதையைத் திருடி கத்தி திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியதாக இவர் தொடுத்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் இன்றும் நிலுவையில் உள்ளது.

ஆனால், தனக்கான நீதி கிடைக்கவில்லை என்றும், நீதி கிடைக்கும் வரை குடும்பத்தினருடன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அன்பு ராஜசேகர் தெரிவித்திருந்தார்.

அதன்படி, கடந்த மாதம் 31-ஆம் தேதியிலிருந்து தனது குடும்பத்தினருடன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்த அவருக்கு இன்று காலை மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அன்பு ராஜசேகர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Most Popular

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 30,000கன அடியாக அதிகரிப்பு!

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல், குற்றால அருவிகள் என பல்வேறு நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை...

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி!

திருப்பதியில் சுமார் 7,000 பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ள நிலையில் அங்கு மக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு திருப்பதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காலை 6...

இலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி!

இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் மகிந்த ராஜபக்சே கட்சி 145 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. இலங்கையில் நேற்று முன் தினம் நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் 71 சதவிகித வாக்குகள் பதிவானது. மொத்தமுள்ள 225 இடங்களில் 196 இடங்களுக்கு நடந்த...

ஆகஸ்ட் 12 முதல் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு தொடக்கம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு...