Home சினிமா கதிருக்காகக் கைகோர்த்த விக்ரம் வேதா படக்குழு

கதிருக்காகக் கைகோர்த்த விக்ரம் வேதா படக்குழு

விஜய் சேதுபதி மாதவன் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான படம் ‘விக்ரம் வேதா’.

விஜய் சேதுபதி மாதவன் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான படம் ‘விக்ரம் வேதா’. இதில் விஜய் சேதுபதியின் தம்பியாக நடித்த கதிர் நல்ல வரவேற்பைப் பெற்றார். அதைத்தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான ‘பரியேறும்பெருமாள்’ படத்திலும் அவரது நடிப்பு பாராட்டப்பட்டதால் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.  

அந்த வரிசையில் தற்போது அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியுள்ள ‘ஜடா’ படத்தில் நடித்துள்ளார். பொயட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்து அசத்தியுள்ளார். இதில் அவருடன் இணைந்து யோகிபாபு, ஆடுகளம் கிஷோர், லிஜீஸ் ஆகியோர் நடித்துள்ளார். 

kathir

இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை  விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் மாதவன், விஜய் சேதுபதி, ஷரத்தா, வரலட்சுமி, இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி, தயாரிப்பாளர் சசி உள்ளிட்ட படக்குழுவினர் சேர்ந்து வெளியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தைப் பற்றிய கூடுதல் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews