Home சினிமா கதாபாத்திரம் மட்டும் தான் ‘பீடை’... உண்மையில் அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்! மனம் நெகிழ்ந்த நகைச்சுவை நடிகர் 

கதாபாத்திரம் மட்டும் தான் ‘பீடை’… உண்மையில் அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்! மனம் நெகிழ்ந்த நகைச்சுவை நடிகர் 

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான படம் ‘பண்ணையாரும் பத்மினியும்’. ஒரு காரை மையமாக  வைத்து அதைச் சுற்றி நடக்கும் இரு காதல் ஜோடிகளின் காதல் கதை தான் இந்த படம். இந்த படத்தில் வரும் வயதான தம்பதிகளின் அன்பு அனைவரையும் நெகிழச் செய்தது

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான படம் ‘பண்ணையாரும் பத்மினியும்’. ஒரு காரை மையமாக  வைத்து அதைச் சுற்றி நடக்கும் இரு காதல் ஜோடிகளின் காதல் கதை தான் இந்த படம். இந்த படத்தில் வரும் வயதான தம்பதிகளின் அன்பு அனைவரையும் நெகிழச் செய்தது. எஸ்.யூ.அருண்குமார் தன் முதல் படத்திலேயே மிகவும் எதார்த்தமான ஒரு காதல் கதையை வழங்கியிருந்தார்.

pannaiyarum-padminiyum

இந்த படத்தில் ‘பீடை’ என்றொரு கதாபாத்திரம் படம் பார்த்தவர்கள் அனைவர் மனதிலும் ஆழமாக பதிந்திருக்கும். நகைச்சுவை நடிகர் பாலசரவணன் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய நகைசுவைக் காட்சிகள் இந்த படத்தில் மக்களை நன்றாக ரசிக்க வைத்தது. இந்த படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பாலாசரவணன் இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து பதிவிட்டிருந்தார்.

peedai

அந்த பதிவில் “என் வாழ்நாளில் மிகமுக்கியமான படம்…படத்தில்தான் அவன் பீடை,ஆனால் நிஜவாழ்கையில் பீடை எனக்கு அள்ளி கொடுத்த ராசிக்காரன்,அவனால் எத்தனை வாய்ப்புகள்…நன்றி அன்பு நண்பா #SUஅருண்குமார்…சேது அண்ணே உங்ககூட நடிச்ச அந்த அன்பு தருணங்கள என்றும் என்னால் மறக்கமுடியாது ணே” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார். இதைப்  பார்த்த அனைவரும் இவரைப் பாராட்டி வருகின்றனர்.

 

மாவட்ட செய்திகள்

Most Popular

திருமணத்தை மீறிய உறவில் இந்திய பெண்களே அதிகம்! அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்!!

இந்தியாவில் திருமணமான பெண்கள் தங்கள் கணவருக்கு தெரியாமல் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடுவது க்ளீடன் என்ற இணையதளம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை – இளைஞர் போக்சோவில் கைது!

கோவை கோவையில் பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் 17...

கண்ணை சுற்றிலும் கருவளையத்தால் கவலை படுறீங்களா?.. உங்களுக்கான சில டிப்ஸ்!

பெரும்பாலானோருக்கு கண்ணின் கீழ் கருவளையம் இருக்கும். இது பல்வேறு காரணங்களால் உருவாகிறது. இதை நீக்குவது அவ்வளவு கடினமான வேலையல்ல. கருவளையங்களை எப்படி எளிதாக நீக்குவது என்பது குறித்து மருத்துவர்களே சொன்ன...

6 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது ஏன்? வைகோ விளக்கம்

திமுக தலைமையிலான கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய வைகோ, “சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள்...
TopTamilNews