Home ஆன்மிகம் கண்திருஷ்டி மற்றும் கண்ணேறு நீக்கும் எளிய பரிகாரம்

கண்திருஷ்டி மற்றும் கண்ணேறு நீக்கும் எளிய பரிகாரம்

கண் திருஷ்டி மற்றும் கண்ணேறு பற்றியும் அதில் இருந்து நம்மை எப்படி காத்து கொள்ளலாம் என்பதை பற்றியும் இந்த பதிவில் நாம் விரிவாக பார்போம்.

 கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது என்பர். அந்தக் கண்ணடிதான் திருஷ்டி எனப்படுகிறது. மற்றவர் நம்மைப் பார்க்கும் பார்வையில் ஒரு தீய தாக்கம் ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால் திருஷ்டி பட்டுவிட்டது என்பர். 

கண்ணேறு என்பது திருஷ்டியின் தூய தமிழ் பெயர். இறைவனாக இருந்தாலும் கண்திருஷ்டி தாக்கும். இதற்கு பரிகாரம் கருப்பு மைதான் என்கிறது கண்திருஷ்டி சாஸ்திரம்.நமக்கோ அல்லது நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ திருஷ்டி தோஷங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை பல நிகழ்ச்சிகள் மூலமும், சில அறிகுறிகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம். 

திருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும். ஒரு சிக்கல் தீருவதற்குள் அடுத்த பிரச்னை காத்துக் கொண்டு இருக்கும். 

kanthrustinklsdkl

கண் திருஷ்டி மனிதா்களை மட்டுமில்லாமல் மனிதனோடு சோ்ந்து வாழும் பறவை, 
விலங்குகளையும் பாதிக்கும் அவா்தம் கட்டடங்களும் பாதிக்கப்படும் பயிர் பச்சைகளும் கூடப் பாதிக்கப்படும்.கண்திருஷ்டி போக்கும் எளிய பரிகாரங்கள் பற்றி பின்வரும் பதிவில் பார்போம்.

1. இங்கிலாந்து நாட்டு ஆங்கிலேயா்கள், குதிரை லாடத்தைத் தலைகீழாக வாசல் நிலைப்படியின்    மேற்பகுதியில் அடித்து வைக்கிற பழக்கம் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது . 

2. அரபு நாடுகளில் வீட்டின் தலை வாசலில் சிறிய வெங்காயத்தைத் துணியில் முடிந்து தொங்க     விடுகின்றனா்.சிலா் பசுமாட்டின் கோமயம் பிடித்து வீட்டின் எல்லாப் பகுதிகளிலும் தெளிப்பார்கள்.

3. அமாவாசை, பெளா்ணமி நாட்களில் உச்சி வேளையில் வீட்டுக்குத் திருஷ்டி கழிக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவா்கள் காலை 6.00 மணி அல்லது மாலை 6.00 மணிக்குத் திருஷ்டி கழிக்கலாம். வீட்டின் எல்லாப் பகுதிகளிலும் வேப்பிலை கொண்டு மஞ்சள்நீா் தெளிக்க வேண்டும்.

4. புதிய மண் சட்டி ஒன்று, ஊமத்தங்காய், படிகாரம் தெருமண் , இவைகளை சேகரித்துக் கொண்டு பெரியவர்களை தெருவாசலில் கிழக்கு முகமாக நிறுத்தி மண்சட்டிக்குள் ஊமத்தங்காய், படிகாரம், தெருமண் இவை மூன்றையும் போட்டு மண்சட்டியை தலைக்கு இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மூன்று முறை சுற்றி தலை முதல் பாதம் வரை இறக்கி அப்படியே எடுத்துச் சென்று முச்சந்திகள் கூடும் இடத்தில் போட்டு உடையுங்கள். 

kasdasdsakl

5. கடல் தண்ணீரை சிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும். 

6.  குழந்தையின் திருஷ்டிபாதிப்புக்கள் குறைய செங்கலால் திருஷ்டி சுற்றி, பிறகு அந்த திருஷ்டி கழித்த செங்கல்லை போட்டு உடைத்து அந்த மண்ணை பூமிதாயை மனதில் நினைத்து கொண்டு, செங்கல் மண்ணை குழந்தையின் நெற்றியில் வைத்தால் அந்த குந்தைகளுக்கு திருஷ்டியால் உண்டாகும் பாதிப்பு குறையும்.

7. கெட்ட கண்திருஷ்டி விலக கருப்பு பசுவுக்கும் கருப்பு நாய்க்கும் உணவு தந்தால் திருஷ்டியால் உண்டாகும் பாதிப்பு குறையும்.

8. வீட்டுக்கு,அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம்.

9. திருஷ்டியால் உண்டாகும் பாதிப்பு குறைய இல்லத்தில் மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு சிகப்பு மீன்களை வளர்க்கலாம்.

10. வீட்டு வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி,முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம்.

njsndflsdfsl

11. ஆகாச கருடன் கிழங்கு வாங்கி அதில் மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.

12. வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.

13. அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.

10. திருஷ்டிக்கழிப்பவர் கல் உப்பைக் கையில் வைத்தபடி மூன்று முறை அப்பிரதக்ஷிணமாய் சுற்றி பின் சாக்கடையில் போடலாம்.

11. தேங்காயினை தலையை சுற்றிய பின் தேங்காயை முச்சந்தியில் போட்டு உடைக்க வேண்டும்.

12. முட்டையை தலையை சுற்றிய பின் முட்டையை முச்சந்தியில் போட்டு உடைக்க வேண்டும்.

njklklkl

13. திருநீறு, கல் உப்பு, மிளகு, மிளகாய் வத்தல், நவதானியங்கள், கடுகு போன்றவற்றை ஒரு காகிதத்தில் பொட்டலம் கட்டி கொள்ளலாம். இரவில் வீட்டிற்கு வெளியே வந்து  கிழக்கு முகமாக நின்று மூன்று முறை வலமாகவும், மூன்று முறை இடமாகவும், தலையை சுற்றி முச்சந்தியில் போட்டு விட்டு, திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்துவிட வேண்டும்.

14. பச்சரிசி,தேங்காய் துருவல்,வாழைப்பழம் இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து புற்றுபோல செய்து, கோவிலில் நாகத்தம்மன் சிலை முன்போ அல்லத புற்றின் முன்பாகவோ வைத்து பச்சரிசி, தேங்காய் துருவல் மற்றும் வாழைப்பழத்தால் செய்த புற்றுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமத்தால் பொட்டுவைத்து வணங்கினால் கிரக தோஷங்கள், கண்திருஷ்டியால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். 

15. பசுவின் பாத மண்ணுக்கு மிகுந்த சக்தி உண்டு வீட்டில் ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது பசுவை இல்லத்திற்கு அழைத்து வந்து கோபூஜை செய்தால் அந்த இல்லத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் விலகும். பசுவின் பின்பக்கம் அதாவது அதன் வால் பகுதியை தொட்டு வணங்கினால் யோகம் ஏற்படும். 

16. பசுவை இல்லத்திற்கு அழைத்து வர முடியாதவர்கள் பசு சாணத்தை சிறிது தண்ணீரில் கலந்து வாசப்படியில் தெளித்தாலும் கண்திருஷ்டியும், பூமி தோஷங்களும் விலகும்.அத்துடன் பொறாமைக்காரர்களின் காலடிபட்ட இடம் பட்டுபோகும் என்பார்கள் பெரியொர்கள். அப்படி பட்டு போகாமல் அந்த தீய பார்வையை விரட்டும்  ஆற்றல் பசுக்கும் அதனின் சாணத்திற்கும் இருக்கிறது.

vnjbkjnjk

17. முதலில் கண் திருஷ்டி காலுக்கே படும். நம் உடலில் எப்பொழுதும் ஏதாவது அடிபட்டு கொண்டே இருந்தாலும் அல்லது தீராத உடல் உபாதைகள் இருந்தாலும், கால் கட்டை விரலின் நகத்தில் கருப்பு மை வைத்தால் திருஷ்டி அண்டாது. 

18. ஞாயிற்று கிழமையில் தண்ணீரில் நன்றாக வாய் கொப்பளித்து, நல்லெண்ணெய்யை ஒரு இரும்பு கரண்டியில் காய்ச்சி, அந்த இரும்பு கரண்டியில் இருக்கும் ,நல்லெண்ணெயில் வாய் கொப்பளித்த தண்ணீரை துப்ப வேண்டும். இப்படி மூன்று முறை துப்பினால் திருஷ்டி கழிந்து, நன்றாக சாப்பிட முடியும். 

மாவட்ட செய்திகள்

Most Popular

ஜெயிச்சு தோற்ற ரம்யா… நீள வசனம் ஆரி… விட்டுக்கொடுத்த கேபி! – பிக்பாஸ் 52-ம் நாள்

எப்பாவாச்சும் நல்ல கண்டண்ட் கிடைக்கும் ஒரு டாஸ்க்கைக் கொடுக்கிறார் பிக்பாஸ். அதுல இந்த கால் செண்டர் டாஸ்க்கும் ஒண்ணு. ஆனா, அதைப் பரபரன்னு கொடுக்கணும்னு நினைக்காம, சீரியல் கணக்கா இழுத்தடிக்க...

“உன்னை வச்சிக்கத்தான் முடியும், கட்டிக்க முடியாது” -கழட்டி விட்ட காதலனின் கல்யாணத்தை நிறுத்திய காதலி.

ஒரு பெண்ணை காதலித்து விட்டு அவரை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி, பலமுறை உறவு கொண்ட காதலனின் கல்யாணத்திற்கு முதல் நாள் அந்த காதலி...

“காரும் போச்சு ,நகையும் போச்சே..” -கல்யாணத்திற்கு வந்தவர் பண்ண வேலையால் கதறிய மாப்பிள்ளை

ஒரு கல்யாண மண்டப வாசலில் சீர் கொடுக்க வைத்திருந்த காரையும் ,நகையையும் யாரோ  கடத்திக்கொண்டு போனதால் மாப்பிள்ளை சோகத்துடன் திருமணம் செய்து கொண்டார்

நிவர் புயலின் கோரம்: மின்கம்பத்தில் மோதி சிறுவன் பரிதாப மரணம்!

வேதாரண்யம் அருகே பெற்றோருக்கு உடை எடுத்து வரச்சென்ற சிறுவன் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே நேற்று நிவர்...
Do NOT follow this link or you will be banned from the site!