Home சினிமா கணவருடன் பிரச்னை...காதலன் வெளியிட்ட படுக்கையறை போட்டோ: சின்னதிரையின் அடுத்த பஞ்சாயத்து ரெடி!

கணவருடன் பிரச்னை…காதலன் வெளியிட்ட படுக்கையறை போட்டோ: சின்னதிரையின் அடுத்த பஞ்சாயத்து ரெடி!

ஷூட்டிங் ஸ்பாட் வந்து என் செல்போனை தூக்கி போட்டு உடைத்ததுடன் என்னையும் அடித்துவிட்டார்’ என்றார். 

நடிகர் சரத்குமார் வடிவேலு காம்போவில் வந்த மாயி திரைப்படத்தில் வாம்மா மின்னல் காமெடியை பலரும் ரசித்து பார்த்து இருப்பார்கள். அதில் நடித்து தீபாவின் பெயர் மின்னல் தீபா என்றே ஆனது. அந்தளவிற்கு அந்த காமெடி பேசப்பட்டது. இதையடுத்து மின்னல் தீபா  விஜய் நடித்த தமிழன், மாதவனின் ரன்  போன்ற படங்களில் நடித்தார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து வருகிறார். 

ttn

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்னல் தீபாவை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த ஒருவர் அடித்துவிட்டதாகச்  செய்திகள்  வெளியானது. இதுகுறித்து இணையதள ஊடகத்திற்கு பேட்டியளித்த மின்னல் தீபா, ‘நான் இத்தனை ஆண்டுகளாக சினிமா மற்றும் சீரியலில் நடித்து வருகிறேன்.

ttn

ஆனால்  எங்கள் இரு குடும்பத்துக்கும் நண்பர் என்று அறிமுகமான ஒருவரால் தான் இந்த பிரச்னை வந்தது. எனக்கும் என் கணவருக்கும் இடையே சிறு பிரச்னை உள்ளது. அது விரைவில் தீர்ந்துவிடும். அதை அந்த மூன்றாவது நபர் பயன்படுத்திக்கொண்டார். எண்னிடம் பேசு என்று என்னை டார்ச்சர் செய்கிறார். ஒருகட்டத்தில் ஷூட்டிங் ஸ்பாட் வந்து என் செல்போனை தூக்கி போட்டு உடைத்ததுடன் என்னையும் அடித்துவிட்டார்’ என்றார். 

ttn

இதுகுறித்து தீபா கூறிய சிட்டி பாபு என்பவர் அளித்த பேட்டியில், நானும் தீபாவும் காதலித்து வந்தோம்.  நெருக்கமாக இருந்தோம். நான் என் நண்பர்களிடம் பேசுவதை பிடிக்காமல் அவர்களிடம் என்னை பற்றி தவறாக  பேசினார்.

ttn

இதனால் நான் அவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால்  அவர் நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று கூறி அழுதார்’ என்று கூறி அதிர்ச்சியை கொடுத்துள்ளார். தற்போது தீபாவும் அவரின் காதலரும் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

‘பாஸான 70% பேர் மீண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதியவர்கள்’: கல்வியாளர்கள் அதிருப்தி!

தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான...

விபத்தில் இறந்த ராணுவ வீரர் உடல் காஞ்சிபுரம் வந்தடைந்தது!

அசாமில் சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் ஏகாம்பரம் உடல் சொந்த ஊரான காஞ்சிபுரம் வந்தடைந்தது. காஞ்சிபுரம் வெள்ளை...

“கொட்டும் ரத்தத்தோடு ,முனகல் சத்தத்தோடு …”-பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கிடந்த பெண் நாய்

மும்பையின் போவாய் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குள் ‘நூரி’ என்ற எட்டு வயது பெண் நாய் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கிடந்தது .

சென்னை திநகர் நகைக்கடையில் கொள்ளை : திருவள்ளூர் கொள்ளையனின் காதலியிடம் விசாரணை!

சென்னை தி.நகர் நகைக்கடையில் கொள்ளையடித்தது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை தி.நகரில் உள்ள மூசா தெருவில் இயங்கி வந்த உத்தம் நகைக் கடையில்...
Do NOT follow this link or you will be banned from the site!