Home க்ரைம் குற்றம் இந்தியா கணவன் - மாமியார் கொடுமை: பட்டினியால் உயிரிழந்த பெண்; சாகும் போது 20 கிலோ எடை மட்டுமே இருந்த கொடூரம்!

கணவன் – மாமியார் கொடுமை: பட்டினியால் உயிரிழந்த பெண்; சாகும் போது 20 கிலோ எடை மட்டுமே இருந்த கொடூரம்!

வரதட்சணை காரணமாக பெண் ஒருவர் பட்டினிபோடப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை உறையவைத்துள்ளது. 

கேரளா: வரதட்சணை கொடுமை காரணமாக பெண் ஒருவர் பட்டினிபோடப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை உறையவைத்துள்ளது. 

உயிரிழந்த இளம்பெண் 

murder

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் சந்துலால். இவருக்கும் துஷாரா என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒன்றரை வயது மற்றும் 3  வயதில்  இரண்டு குழந்தைகள் இருந்துள்ளது.

இந்நிலையில் துஷாரா உடல்நலக் குறைவால் கடந்த மார்ச் 21ம் தேதி கொல்லம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால்  துஷாரா வழக்கில் ஒருவாரத்திற்குப் பிறகு தான் போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. 

விசாரணையில் வெளிவந்த உண்மைகள் 

dowry

துஷாராவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியுள்ளது. திருமணத்தின்போது  மணமகன் வீட்டார் கேட்ட நகைகள், பணத்தை என வரதட்சணை வழங்கிய, துஷாரா குடும்பத்தினர் மேலும் 2 லட்சம் பணத்தை பின்பு தருகிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால்  வறுமை காரணமாக அதைக் கொடுக்க முடியாமல்  போக கணவர் சந்துலால்  மற்றும் அவரது தாயார் கீதா இருவரும் சேர்ந்து துஷாராவை கொடுமைப்படுத்தத் துவங்கியுள்ளனர்.  துஷாராவுக்கு சூடு போட்டும்  அடித்தும் கொடுமைப்படுத்தி வந்த இவர்கள்,  ஒருகட்டத்தில் வீட்டின் ஒரு அறையில் துஷாராவை தனிமையில் அடைத்துப் பூட்டி  வெறும் சர்க்கரை தண்ணீரும் நீரில் ஊறவைத்த அரிசியையுமே உண்ண உணவாக கொடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பட்டினி போட்டே கொன்ற பரிதாபம் 

dowry

இது குறித்து வழக்கை விசாரித்த காவல் அதிகாரி கூறும் போது, முதலில் இது இயற்கையான மரணம் அல்ல என்று நினைத்தோம். இதையடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியதில் துஷாரா வரதட்சணை கொடுமைக்குள்ளாகி இருந்திருப்பது தெரியவந்தது.  துஷாரா  உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.ஆனால்  அவர்  இந்த கொடுமைகளை அனுபவித்தார் என்பது தெரியவில்லை. உண்மையில் வதுஷாரா உயிரிழந்தபோது அவர் வெறும் 20 கிலோ எடையில் மட்டுமே இருந்துள்ளார்.  அதனால் உடலில் சதையே இல்லாத அளவிற்குத் துன்புறுத்தப்பட்டுள்ளார். துஷாராவை கொடுமைப்படுத்தியது தொடர்பாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் வாக்குமூலம் தர முன்வந்துள்ளனர்’ என்றார். 

துஷாரா குடும்பத்தினருக்கு அனுமதியில்லை 

abuse

துஷாராவை பார்க்க அவரது குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருமணமான ஒரு வருடம் மட்டுமே துஷாராவை அவர்கள் குடும்பத்தினர் பார்த்துள்ளார்.அதையடுத்து அடுத்த ஐந்து ஆண்டுகள் அவர் எப்படி இருக்கிறார் என்று கூட அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. இது குறித்து போலீசில் புகார் கொடுத்தால் மகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சி துஷாராவை பார்க்காமலிருந்துள்ளனர். 

கணவன் மாமியார் கைது 

arrst

இதற்கிடையே, வரதட்சணை கொடுமைப்படுத்தி மனைவியை கொன்ற வழக்கில், துஷாராவின் கணவர் சந்துலால்  மற்றும் மாமியார் கீதா  ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் துஷாராவின் இரண்டு குழந்தைகளும் கொல்லத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

பெண் கல்வியில் முன்னணி மாநிலமாக உள்ள கேரளாவில் பெண் ஒருவர் வரதட்சணை கொடுமையால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது போன்ற கொடூரச் செயலில் ஈடுபட்ட அப்பெண்ணின் கணவர் மற்றும் மாமியாருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இதையும் வாசிக்க: காதலித்த மகளை கொன்று விட்டு பெற்றோரும் தூக்கில் தொங்கிய கொடூரம்: சேலத்தில் பரபரப்பு!
 

மாவட்ட செய்திகள்

Most Popular

கூரை ஏறி கோழிபிடிக்க தெரியாதவன்… ஸ்டாலினை கடுமையாக சாடிய அமைச்சர் செல்லூர் ராஜு

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றிய கீழமாத்தூரில் ஜல் ஜீவன் மிஷன் திட்டப்பணிக்கான பூமி பூஜை தொடங்கி வைத்தார்.

அடுத்த போட்டியில் களம் இறங்குவாரா ரோஹித் ஷர்மா?

நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் ஆகியுள்ள டீம் மும்பை இண்டியன்ஸ். அதற்கு முக்கியக் காரணம் அந்த அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா. ஆனால், அவர் தற்போது இரண்டு போட்டிகளாக ஆடவில்லை.

அரசு நலத்திட்ட பணிகளை தொடங்கிவைத்த அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு ஈரோடு மாவட்டம், கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.43.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்து, 67 பயனாளிகளுக்கு ரூ.84.24...

‘7.5% இட ஒதுக்கீடு’ நந்தகுமாரின் கடிதத்துக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை: எல்.முருகன் விளக்கம்!

இட ஒதுக்கீடு விவகாரத்தில் நந்தகுமாரின் கடிதத்துக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Do NOT follow this link or you will be banned from the site!