கணவனின் மாமாவை வெட்டி கொலை செய்த பெண்: நடத்தை குறித்து பேச்சால் நடந்த பயங்கரம்!

இரு குடும்பத்துக்கும் அடிக்கடி தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது. எனினும் மணிகண்டன் தனது அவதூறு பேச்சை  நிறுத்தவில்லை.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியைச் சேர்ந்தவர்கள் பாண்டீஸ்வரன் நிரஞ்சனா தம்பதி. இந்த தம்பதி கடந்த 7 ஆம் தேதி சண்முகா நதி அணை செல்லும் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பாண்டீஸ்வரன் அக்கா ராஜேஸ்வரி அவரது கணவர் மணிகண்டன் இருவரையும் வழிமறித்து பேசியுள்ளனர். சில நிமிடங்களில் நிரஞ்சனா மணிகண்டனை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். தடுக்க வந்த மனைவி ராஜேஸ்வரிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கணவன் மனைவி இருவரும் அங்கிருந்து தப்பித்துள்ளனர்.

ttn

இதுகுறித்து தகவலறிந்த போலீசார், மணிகண்டன் உடலை கைப்பற்றியதுடன் காயமடைந்த ராஜேஸ்வரியை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அவர்கள், வீட்டில் பதுங்கியிருந்த பாண்டீஸ்வரன் நிரஞ்சனா தம்பதியை கைது செய்தனர்.

 

ttn

அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மணிகண்டனும், அக்கா கணவர் பாண்டீஸ்வரனும் சில ஆனைமலையன்பட்டியில் டீக்கடை வைத்து நடத்தி வந்தனர். இதில் நஷ்டம் ஏற்படவே இருவரும் வாழை இலை  அறுக்கும் வேலைக்கு  சென்று வந்துள்ளனர். இதனிடையே மணிகண்டன் மைத்துனர் மனைவியான நிரஞ்சனா குறித்து குடிபோதையில் தவறாக பேசி வந்துள்ளார். அவர் நடத்தை குறித்து பேசி வந்ததால் இரு குடும்பத்துக்கும் அடிக்கடி தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது. எனினும் மணிகண்டன் தனது அவதூறு பேச்சை  நிறுத்தவில்லை.

ttn

இந்நிலையில் மணிகண்டனை நேரில் சந்தித்து இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாகப் பேசிவிட்டு வரலாம் என பாண்டீஸ்வரனும், நிரஞ்சனாவும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இந்த பேச்சு வார்த்தை தான் கடைசியில் கொலையில் முடிந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து பாண்டீஸ்வரனையும், நிரஞ்சனாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Most Popular

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 30,000கன அடியாக அதிகரிப்பு!

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல், குற்றால அருவிகள் என பல்வேறு நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை...

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி!

திருப்பதியில் சுமார் 7,000 பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ள நிலையில் அங்கு மக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு திருப்பதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காலை 6...

இலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி!

இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் மகிந்த ராஜபக்சே கட்சி 145 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. இலங்கையில் நேற்று முன் தினம் நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் 71 சதவிகித வாக்குகள் பதிவானது. மொத்தமுள்ள 225 இடங்களில் 196 இடங்களுக்கு நடந்த...

ஆகஸ்ட் 12 முதல் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு தொடக்கம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு...