Home சினிமா கட்டுனா அவரைத்தான் கட்டுவேன்’...டி.வி.நடிகையின் அபார்ட்மெண்டுக்குள் புகுந்த எஞ்சினியரிங் ஸ்டூடண்ட்...

கட்டுனா அவரைத்தான் கட்டுவேன்’…டி.வி.நடிகையின் அபார்ட்மெண்டுக்குள் புகுந்த எஞ்சினியரிங் ஸ்டூடண்ட்…

‘நகரம்’படத்தில் வடிவேலு கட்டுனா திவ்யா இல்லைன்னா த்ரிஷா என்று அலைவாரே அதே போல் டி.வி சீரியல் நடிகை ஒருவரைத் திருமணம் செய்ய நேராக அவரது அபார்ட்மெண்டுக்குள்ளேயே புகுந்த எஞ்சினியரிங் மாணவரை வடபழனி போலீசார் கைது செய்துள்ளனர்.

‘நகரம்’படத்தில் வடிவேலு கட்டுனா திவ்யா இல்லைன்னா த்ரிஷா என்று அலைவாரே அதே போல் டி.வி சீரியல் நடிகை ஒருவரைத் திருமணம் செய்ய நேராக அவரது அபார்ட்மெண்டுக்குள்ளேயே புகுந்த எஞ்சினியரிங் மாணவரை வடபழனி போலீசார் கைது செய்துள்ளனர்.

rithika

பிரபல டிவி சீரியல் நடிகை ரித்திகா. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருகிறார்.இவர் வடபழனி நூறடி சாலையில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தந்தை சுப்பிரமணியுடன் வசித்து வருகிறார்.

இன்று காலை அவரது குடியிருப்புக்குள் புகுந்த பரத் என்னும் கோபிச்செட்டிப்பாளைய எஞ்சினியரிங் படித்த இளைஞர் நேராக நடிகை ரித்திகாவின் வீட்டிற்கு சென்றார். அவர் கதவைத் தட்டியதும் ரித்திகாவின் தந்தை சுப்பிரமணி அங்கு வந்தார். அப்போது அந்த வாலிபர் கொஞ்சமும் தயக்கமின்றி  நடிகை ரித்திகாவை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.

raja rani

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அந்த வாலிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே வாலிபர் நடிகையை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முரட்டுப் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார். அப்போது நடிகை ரித்திகாவும் இருந்தார்.

இதற்குள் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்களும், குடியிருப்பு காவலாளியும் அங்கு வந்தனர். அவர்கள் மிரட்டல் விடுத்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை வடபழனி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் பரத்திடம் விசாரணை நடத்தியபோது வேலை விசயமாக சென்னை வந்ததாகவும் ‘ராஜா ராணி’ சீரியல் பார்த்த பிறகு ரித்திகாவை மனதார தன் மனைவியாக ஆக்க முடிவெடுத்துவிட்டதாகவும், கொண்ட கொள்கையில் தான் இன்னும் உறுதியாகவே இருப்பதாகவும் தெரிவித்துவருகிறாராம்.

சீரியல்ல மட்டும் எவ்வளவு ட்விஸ்ட் வைக்கிறீங்க… இந்தா நம்ம பரத் காதல் பக்தியோட ‘குணா’ கமல் மாதிரி  ‘ரித்திகா…ரித்திகா…ரித்திகான்னு பிடிவாதமா நிக்கிறாரே இதுக்கு என்ன சொல்றீங்க…

மாவட்ட செய்திகள்

Most Popular

9,10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டாம்- பள்ளி கல்வித்துறை

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் கடந்த ஆண்டும் மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டும் ஆல் பாஸ் அறிவிப்பு வந்திருக்கிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு...

திடீர் உடலநலக்குறைவால் பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘கோலி சோடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனவர் நடிகர் பவர் ஸ்டார்...

50 தொகுதிகள் கேட்டு திமுகவுக்கு காங்கிரஸ் கடிதம்! 20 தான் முடியும் என்கிறது திமுக

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. கூட்டணி உறுதி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸின் மூத்த தலைவரான உம்மன் சாண்டி, தமிழக காங்கிரஸ் கட்சியின்...
TopTamilNews