கட்டபொம்மன் வாரிசுகளால் மணக்கும் பாஸ்வான் பிரியாணி… ‘அறந்தாங்கி ராஜா சேட் !மெஸ்’வேளச்சேரி

செட்டிநாட்டில் சில குடும்பங்களிடையே மட்டும் புழங்கிய இந்த ரகசிய ரெசிப்பியில் தக்காளி, மிளகாய்தூள் கிடையாது.மட்டனை முதலில் நிறையத் தண்ணீர் சேர்த்து வேகவைப்பார்கள்

சென்னை வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் எதிரே இருக்கிறது இந்த வித்தியாசமான உணவகம்.இதை நடத்தும் ராஜா சேட்டுக்கு ஒரே லட்சியம்,50 வருசம் முன்பு இருந்த சுவைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற முனைப்போடு இந்த உணவகத்தை திறந்திருக்கிறார்.அவரது முயற்சி இங்கு கிடைக்கும் ஒவ்வொரு பண்டத்திலும் தெரிகிறது.உதாரணமாக நம்ம ஊர் குழம்புகளுக்கு முக்கியமானது மல்லி என்பதால் பழைய நாட்டு மல்லியைத் தேடி அலைந்திருக்கிறார்.

mess

கடைசியில் விருதுநகர் மாவட்ட கிராமங்களில் வீரபாண்டிய கட்டப் பொம்மன் வாரிசுகள் இப்போதும் நாட்டு மல்லி சாகுபடி செய்வதை கண்டு பிடித்திருக்கிறார்.இந்த உணவக குழம்புகளின் மணத்துக்கு அந்த மல்லிதான் காரணம் என்கிறார்.அதில் முக்கியமானது பாஸ்வான் பிரியாணி!.

briyani

செட்டிநாட்டில் சில குடும்பங்களிடையே மட்டும் புழங்கிய இந்த ரகசிய ரெசிப்பியில் தக்காளி, மிளகாய்தூள் கிடையாது.மட்டனை முதலில் நிறையத் தண்ணீர் சேர்த்து வேகவைப்பார்கள்.அந்த தண்ணீரில் தான் சீரகசம்பா அரிசியே வேகும்.இந்த பாஸ்வான் பிரியாணி இங்கே செம ஹிட்.விலை 180 ரூபாய் மட்டுமே.அதற்கு வெங்காயப் பச்சடியுடன் ஒரு ஜாம் தொடுகறியாகத் தருகிறார்கள். தக்காளி,நெய்,தேன்,முந்திரி இவற்றுடன் ஒரு மூலிகை சேர்க்கிறார்களாம்,அப்படி ஒரு சுவை அந்த ஜாமுக்கு.

jam

சாப்பாடு 130 ரூபாய்,அதற்குத் தரப்படும் தொடுகறிகளும் கிரேவிகளும் சிறப்பாக இருக்கின்றன.ராஜா சேட் மெஸ்ஸின் சிறப்பே அவர்கள் தரும் கிரேவிகள்தான்.ஒரே ஒரு புரோட்டா வாங்கினால் கூட அதற்கு மூன்று கிரேவிகள் தருகிறார்கள்.

fish

அடுத்தது நெய்மீன் புட்டு போன்ற அதிகம் கேள்விப்படாத ஐட்டங்கள். வஞ்சிரம் மீனை வேகவைத்து தோல் மற்றும் எலும்புகளை நீக்கிவிட்டு எளிய மசாலாக்களுடன் செய்யப்படும் இந்த நெய்மீன் புட்டு குழந்தைகள் இடையே பெரியஹிட்.அடுத்தமுறை அந்தப்பக்கம் போனால் இந்த அனுபவத்தை தவற விட்டு விடாதீர்கள்.

Most Popular

லட்சக்கணக்கில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா நிலவரம்

சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்றவையே கொரோனா பரவலைத் தடுக்க கடும் போராட்டத்தில் உள்ளன.  இன்றைய தேதி...

விஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல இடங்கள் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் விஜயவாடா பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றும் கொரோனா வார்டாக மாற்றம்...

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....

தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு!

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நேற்று நொடிக்கு 50,000 கனஅடி...