Home அரசியல் கட்சி மாறினால் ரூ.35 கோடி, ஓட்டுப் போட்டால் ரூ.5 கோடி! - காங். எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய பா.ஜ.க

கட்சி மாறினால் ரூ.35 கோடி, ஓட்டுப் போட்டால் ரூ.5 கோடி! – காங். எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய பா.ஜ.க

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினால் ரூ.35 கோடி, மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வாக்களித்தால் ரூ.5 கோடி தருவதாக பா.ஜ.க நிர்வாகி தன்னிடம் பேரம் பேசியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

கட்சி மாறினால் ரூ.35 கோடி, ஓட்டுப் போட்டால் ரூ.5 கோடி! - காங். எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய பா.ஜ.க

bjp-madhya pradesh

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேரை பா.ஜ.க கடத்திவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ பைஜ்நாத் குஷ்வாஹா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் மூத்த பா.ஜ.க தலைவருமான சிவ்ராஜ் சிங் சௌகான், மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர், பா.ஜ.க கொறடா நரோத்தம் மிஸ்ரா ஆகியோர் அனுப்பியதாக பிரமோத் சர்மா என்பவர் என்னிடம் வந்தார். பா.ஜ.க-வுக்கு அணி மாற ரூ.25 முதல் 35 கோடி வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். மேலும் மீண்டும் எம்.எல்.ஏ-வாக்கப்பட்டு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் கூறினார். அப்படி இல்லை என்றால் மாநிலங்களவைத் தேர்தலில் பா.ஜ.க- வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தால் போதும், ரூ.5 கோடி தருகிறோம் என்று கூறினார். நான் எதுவும் வேண்டாம் என்று அவரை அனுப்பிவிட்டேன். என்னிடம் எதுவும் இல்லை என்றாலும் நான் எம்.எல்.ஏ-வாக இருக்கிறேன்… இதைவிட வேறு என்ன வேண்டும். நான் காங்கிரசில்தான் இருப்பேன். என்னை விலைக்கு வாங்க முடியாது” என்றார்.

கட்சி மாறினால் ரூ.35 கோடி, ஓட்டுப் போட்டால் ரூ.5 கோடி! - காங். எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய பா.ஜ.க
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட மகத்தான படைப்பாளி; கமல் புகழஞ்சலி

கரிசல் இலக்கிய தந்தை என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன்(99) நேற்று காலமானார். புதுச்சேரியில் வசித்து வந்த அவர், மூப்பின் காரணமாக...

இ-பதிவு இணையதளத்தில் திருமணம் பிரிவு மீண்டும் நீக்கம்!

கொரனோ பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசரம், முதியோர் பராமரிப்பு, இறப்பு மற்றும் திருமணம்...

“அரசு மரியாதையுடன் எழுத்தாளர் கி.ரா. உடல் நல்லடக்கம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எழுத்தாளர் கி.ரா. மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா...

இந்தியாவில் குறையும் கொரோனா : ஒரே நாளில் 4.22 லட்சம் பேர் குணமாகினர்!

இந்தியாவில் ஒரேநாளில் 2,63,533 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. காரணம் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்து...
- Advertisment -
TopTamilNews