Home சினிமா கடும் போட்டிகளுக்கு மத்தியில் தளபதி 63 படத்தின் ஆடியோ உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

கடும் போட்டிகளுக்கு மத்தியில் தளபதி 63 படத்தின் ஆடியோ உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

தளபதி 63 படத்தின் ஆடியோ உரிமையைச் சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சென்னை: தளபதி 63 படத்தின் ஆடியோ உரிமையைச் சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அட்லீ- விஜய் காம்போவில் மூன்றாவது முறையாக கூட்டணி அமைந்து உருவாகிவரும் திரைப்படம் தளபதி 63. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா நடித்து வருகிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டு மையமாகக் கொண்டு உருவாகும் இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்து வருகிறர். 

மேலும் ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுயடைந்த நிலையில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் படத்தின் அப்டேட் வெளியிடுமாறு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தளபதி 63 பட தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை நேற்று மாலை வெளியிட்டது. 

இந்தநிலையில் படத்தின் ஆடியோ உரிமத்தைப் பிரபல சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக அட்லீ-விஜய் காம்போவில் வெளியான மெர்சல் படத்தின் ஆடியோ உரிமத்தை இந்த நிறுவனம் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

”10 நாள் தசரா பண்டிகையில் – கார் விற்பனை படுஜோர்”

பண்டிகை கால விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது. நவராத்திரி உள்ளிட்ட பத்து நாட்கள் தசரா பண்டிகை காலத்தில் மட்டும் பல்வேறு நிறுவனங்களின் கார் விற்பனை இருமடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

தஞ்சாவூர்: பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக விசிக போராட்டம் – பரபரப்பு

தஞ்சையில் பாஜக ஆர்ப்பாட்டத்தின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட...

திருமாவளவனை கைதுசெய்ய கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி இந்து பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை கண்டித்து, திருச்சியில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக துணை...

திருமாவளவனுக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

ஊட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Do NOT follow this link or you will be banned from the site!