Home அரசியல் கஜா புயல்; திமுக நிதியை முதல்வரிடம் வழங்கினார் துரைமுருகன்

கஜா புயல்; திமுக நிதியை முதல்வரிடம் வழங்கினார் துரைமுருகன்

கஜா புயல் நிவாரண பணிக்காக திமுக சார்பில் ஒதுக்கிய ரூ 1 கோடி நிதியை முதல்வர் பழனிசாமியிடம் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் வழங்கினார்.

சென்னை: கஜா புயல் நிவாரண பணிக்காக திமுக சார்பில் ஒதுக்கிய ரூ 1 கோடி நிதியை முதல்வர் பழனிசாமியிடம் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் வழங்கினார்.

சோறுடைத்த சோழ நாடு என பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் தற்போது சோறில்லாமல் இருந்து வருகின்றன. கஜா புயல் அந்த மாவட்டங்களின் வளர்ச்சியை 20 வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்து சென்றுள்ளது. அரசு தரப்பு, தன்னார்வலர்கள் என அங்கு அங்கு மீட்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்களும் சென்ற வண்ணம் இருக்கின்றன. தமிழக அரசு சார்பில் ரூ 1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே திமுக சார்பில் கஜா புயல் நிவாரண பணிகளுக்காக ரூ 1 கோடி நிதி ஒதுக்கி அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், திமுகவின் பொருளாளர் துரைமுருகன், கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் முதல்வர் பழனிசாமியின் இல்லத்திற்கு சென்று ரூ 1 கோடி நிதியை வழங்கினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சட்டவிரோதமாக மது விற்ற 123 பேர் கைது; 1,882 மதுபாட்டில்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த 123 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஆயிரத்து 882 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தேவர் குருபூஜை விழாவையொட்டி,...

நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டடம் இடிந்து விழவில்லை; அதிகாரிகளே இடித்தனர்- அமைச்சர் தங்கமணி

நாமக்கல்லில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள 25 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ. 336 கோடி மதிப்பீட்டில் இந்த அரசு மருத்துவக்கல்லூரி...

துருக்கியை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்! சரிந்து விழுந்த கட்டடம்!!

துருக்கி அருகே உள்ள ஏஜியன் கடல் பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த இருபதுக்கும் அதிகமான கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. கிரீஸ்...

தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா உயிர் பலி! இன்றைய பாதிப்பு நிலவரம்

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4 கோடியே 51 லட்சமாக அதிகரித்துள்ளது. 11 லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை...
Do NOT follow this link or you will be banned from the site!