Home அரசியல் ஓராண்டுக்குள் 3 முன்னாள் முதல்வர்களை இழந்த டெல்லி

ஓராண்டுக்குள் 3 முன்னாள் முதல்வர்களை இழந்த டெல்லி

கடந்த 12 மாதங்களுக்குள் மதன் லால் குரானா, ஷீலா தீட்சித் மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகிய 3 முன்னாள் முதல்வர்களை டெல்லி மக்கள் இழந்துள்ளனர்.

காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான மதன் லால் குரானா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார். அவர் 1993 முதல் 1996 வரை டெல்லியின் முதல்வராக பதவி வகித்தவர். 

மதன் லால் குரானா

அடுத்ததாக, டெல்லி காங்கிரசின் அடையாளமாக விளங்கியவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித் கடந்த மாதம்தான் உடல் நலக் குறைவு காரணமாக இறைவனடி சேர்ந்தார். அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைத்து தலைவர்களாலும் மகிவும் மதிக்கப்பட்ட நபர் ஷீலா தீட்சித். 

ஷீலா தீட்சித்

இந்நிலையில், நேற்று இரவு வெளியுறவுத்துறையின் முன்னாள் அமைச்சரும், பா.ஜ. வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா ஸ்வராஜ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 1998ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை அவர் டெல்லியின் முதல்வராக பதவி வகித்தார். தனது உடல்நிலையை கருத்தில் கொண்டே சுஷ்மா ஸ்வராஜ் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. அவரது இறுதிச் சடங்கு இன்று மதியம் 3 மணி அளவில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

சுஷ்மா சுவராஜ்

கடந்த ஓராண்டுக்குள் 3 முன்னாள் முதல்வர்களை டெல்லி மக்கள் இழந்துள்ளனர். அவர்கள் மண்ணை விட்டு சென்று விட்டாலும் அவர்கள் ஆற்றிய சேவையால் எப்போதும் மக்கள் மனதில் நீங்காமல் நிலைத்து நிற்பர்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews