Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் ஓயாத மூட்டைப்பூச்சி தொல்லையா? ஒரேயடியா காலி பண்ண இதுதான் வழி!

ஓயாத மூட்டைப்பூச்சி தொல்லையா? ஒரேயடியா காலி பண்ண இதுதான் வழி!

வீட்டில் நிம்மதியான தூக்கத்தை மூட்டைப் பூச்சிகள் ரொம்பவே கெடுத்து விடுகிறது . மூட்டைப் பூச்சியால் நோய்கள் எதுவும் வராது

வீட்டில் நிம்மதியான தூக்கத்தை மூட்டைப் பூச்சிகள் ரொம்பவே கெடுத்து விடுகிறது . மூட்டைப் பூச்சியால் நோய்கள் எதுவும் வராது. இருந்தாலும் தோலில் அழற்சியை ஏற்படுத்தி விடும். மூட்டை பூச்சிகள் பகலை விட இரவில் தான் அதிக சுறுசுறுப்பாக செயல்படும்.

மூட்டைப்பூச்சி கடித்த இடத்தில் ஆன்டிசெப்டிக் க்ரீம் பயன்படுத்தினால் ஓரளவுக்கு நிவாரணம் கிடைக்கும். இருப்பினும் கெமிக்கல் இல்லாத வீட்டு வைத்தியங்கள் செய்தால் நமது சருமத்துத்கு நல்லது. 

bugs

மூட்டை பூச்சிகளின் கடியின் வீரியத்தை பொருத்து அதற்கு சிகச்சை அளிக்கப்படுகிறது. இந்த சரும அழற்சி 1-2 வாரங்களில் சரியாகி விடும். ஆனால் கடிபட்ட இடத்தில் ஏற்படும் அரிப்பு படிப்படியாக சரும தொற்றை ஏற்படுத்தி விடும். எனவே உடனடியாக டைபென் ஹைட்ரேமைன் அல்லது கார்டிசோன் அடங்கிய ஆன்டி கேலமைன் லோசனை உடனடியாக சருமத்துக்கு அப்ளை செய்யலாம். இந்த க்ரீமை கண்களில், பிறப்புறுப்பு பகுதிகளில் தடவ வேண்டாம்.

இந்த மருந்து சரும அரிப்பை தடுத்து சரும தொற்று ஏற்படாமல் காக்கிறது. காயப்பட்ட சருமத்தில் இந்த க்ரீமை பயன்படுத்த வேண்டாம். சருமம் சிவந்து காணப்பட்டாலும் க்ரீமை பயன்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. டைபென்ஹைட்ரேமைன் டானிக் கூட எடுத்துக் கொள்வது அரிப்பை குறைக்கும்.

bugs

ஜோனாலன் மற்றும் ப்ரூடோக்ஸின் (டோக்சீபின்) போன்ற க்ரீம்கள் உள்ளன. இதன் ட்ரைசைக்ளிக் ஆன்டிடிப்ரஸன் அரிப்பிற்கு காரணமான ஹிஸ்டமைனை குறைக்கிறது. கார்டிசோன் க்ரீம் கூட பயன்படுத்தலாம். ஆண்டிஹிஸ்டமைன் மருந்தும் சிறந்தது.

சரும தொற்று ஏற்பட்டு இருந்தால் ஆன்டி பயாடிக் பரிந்துரைக்கப்படுகிறது. பாக்டிர்பன் (முப்பிரோசின்) போன்ற ஆன்டி பயாடிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சரும தொற்று தீவிரமாக காணப்பட்டால் அனபிலாக்ஸிஸ், ஆண்டிஹிஸ்டமைன், கார்ட்டிகோ ஸ்டீராய்டுகள்போன்ற ஊசிகள் போடப்படுகின்றன.

bugs

உங்கள் வீட்டில் மூட்டை பூச்சி தொல்லை அதிகமாக இருந்தால் உடனடியாக அதை விரட்ட வேண்டும். பூச்சிகளை விரட்டும் நிபுணர்களை வைத்து இதை ஒழிக்கலாம். அப்படி இல்லையென்றால் போதுமான பாதுகாப்புடன் மூட்டை பூச்சி மருந்து வாங்கி அடிக்கலாம்.

முதலில் மூட்டை பூச்சிகள் இருக்கும் வீட்டின் பகுதிகளை கண்டறிய வேண்டும். கண்டுபிடித்த பிறகு அந்த அறையில் இருந்து எதையும் எடுத்துச் செல்ல கூடாது. ஏனெனில் வீட்டில் உள்ள எல்லா பர்னிச்சர்களிலும் அது இருக்க வாய்ப்புள்ளது. இப்பொழுது அறையில் உள்ள பொருட்களை ஒழுங்குபடுத்தி பெஸ்ட் கண்ட்ரோல் ஆட்களை கூப்பிடலாம். கெமிக்கல் அல்லாதது.

120 டிகிரி பாரன்ஹைடில் சூடுபடுத்தும் போது மூட்டை பூச்சி இறந்து விடும். எனவே மூட்டை பூச்சி உள்ள பொருட்களை 120 டிகிரி பாரன்ஹைடு வெப்பத்தில் சூடாக்கப்பட்ட நீரில் போட்டு சுத்தம் செய்யலாம். துணிகளை இந்த மாதிரி 30 நிமிடங்கள் சூடான நீரில் போட்டு சுத்தம் செய்தால் நல்லது. 

bugs

ஒரு கருப்பு பிளாஸ்டிக் பேக்கில் போட்டு 24 மணி நேரம் சூரிய ஒளியில் காய விடலாம். வீட்டில் உறவினர்கள் கொண்டு வரும் லக்கேஜ் போன்றவற்றில் கூட இந்த பூச்சிகள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த வெப்ப சிகச்சைகள் மூட்டை பூச்சிகளை அழிக்க உதவியாக இருக்கும்.

பொருட்களை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு ஜீரோ டிகிரி பாரன்ஹைடு குளிரில் 7 நாட்களுக்கு உறைய வைக்கவும். ப்ரீஷர் பயன்படுத்தி இதை செய்யலாம்.

மூட்டை பூச்சிகள் நுழையாத படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் போன்றவை கிடைக்கின்றன. மேலும் மூட்டை பூச்சிகளை விரட்டும் பொருட்களை கட்டிலினின் ஒவ்வொரு கால்களில் கூட வைத்துக் கொள்ளலாம். அதே மாதிரி கட்டில் 6 அங்குலம் சுவற்றிலிருக்து தள்ளி இருக்க வேண்டும். இப்படி செய்தால் மூட்டை பூச்சிகள் கட்டிலை நெருங்காது.

bugs

சில பூச்சி மருந்துகள் இநத மூட்டை பூச்சிகளை ஒழிக்க பயன்படுகிறது. இந்த கெமிக்கல்கள் மூட்டை பூச்சிகள் படுக்கை விரிப்பை அடையாமல் தடுக்க உதவுகிறது.

இதில் டயோடோமேக்சஸ் மற்றும் போரிக் அமிலம் உள்ளது. இது இபிஏ வில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்தாக செயல்படுகிறது.

குளிர்விக்கப்பட்ட வேப்பெண்ணெய் கூட பூச்சி விரட்டியாக பயன்படுகிறது.

குளோபெனபியர் போன்றவை பூச்சியின் செல்களை பாதித்து அதை விரட்டியடிக்கிறது.

நியோகோடினாய்டுகள் போன்ற நிக்கோடின் பூச்சியின் நரம்பு மண்டலத்தை பாதித்து அதை விரட்டுகிறது.

பூச்சி வளர்ச்சி கட்டுப்பாடு பூச்சியின் ஹார்மோனை பாதித்து அவற்றின் வளர்ச்சியை சீர்குலைக்கிறது.

பூச்சி விரட்டும் பொருட்களான எலும்பிச்சை, யூகாப்லிப்ட்ஸ் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். பழைய பர்னிச்சர், பழைய கட்டில்கள் வாங்கும் போது கவனமாக வாங்க வேண்டும். ஆடைகளை சுத்தமாக துவைத்த பிறகு அணியுங்கள். தலையணை உறைகள், மெத்தைகள் எல்லாவற்றையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். படுக்கை அறை சுவற்றில் உள்ள விரிசல்கள், இடுக்குகளை அடைத்து விடுங்கள்.

பயண நாட்களில் ஹோட்டல்களில் இருக்கும் போது கூட ஆடைகளை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு சீக்கிரம் வீட்டில் வந்து துவைத்து விடுங்கள். சூடான நீர், சோப்பு கொண்டு அலசவுது நல்லது. லக்கேஜ் பேக் இடுக்குகள் ஒன்னு விடாமல் கழுவி சுத்தம் செய்து விடுங்கள்.

மூட்டை பூச்சி கடி தொந்தரவு இருந்தால் தூக்கமின்மை, ஆன்சிட்டி, மன அழுத்தம் ஏற்படும். எனவே படுக்கை அறையை சுத்தமாக வைப்பதோடு மூட்டை பூச்சி கடிக்கு நிவாரணம் அளித்து அதை உடனடியாக விரட்ட முற்பட வேண்டும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

பப்பு மீன் பிடிக்கிறார்… கடைசியில் இ.வி.எம். சரியில்லை என சொல்வர்கள்.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. அமைச்சர்

பா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்யும் வேளையில், பப்பு (ராகுல் காந்தி) மீன் பிடித்து கொண்டு இருக்கிறார் ஆனால் கடைசியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சரியில்லை என்று காங்கிரசார்...

செங்கோட்டை வன்முறைக்கு விவசாயிகள் காரணம் அல்ல…. மத்திய அரசுதான்.. அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லி செங்கோட்டை வன்முறை சம்பவத்துக்கு விவசாயிகள் காரணம் அல்ல, அது மத்திய அரசின் சதி என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய...

ஒரு துறை 2 ஆண்டுகளாக இருப்பது கூட தெரியாத தலைவரை மக்கள் விரும்புகிறார்களா? அமித் ஷா கேள்வி

ஒரு துறை 2 ஆண்டுகளாக இருப்பது கூட தெரியாத தலைவரை (ராகுல் காந்தி) விரும்புகிறீர்களா என்று மக்களிடம் கேட்க விரும்புகிறேன் என்று ராகுல் காந்தியை அமித் ஷா தாக்கி பேசினார்.

இந்த வாரம் பங்குச் சந்தையில் வர்த்தகம் எப்படி இருக்கும்? பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு..

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் வாகன விற்பனை உள்ளிட்டவை இந்த வாரம் பங்கு சந்தைகளின் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
TopTamilNews