ஓடும் ரயிலில் அடையாளம் தெரியாத நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓடும் ரயிலில் அடையாளம் தெரியாத நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு இரயிலில் 50 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பனில் முன்பதிவு செய்த பெட்டியில் ஏரிய 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உச்சிபுளி அருகே ரயில் வந்து கொண்டிருக்கும்போது தான் வைத்திருந்த துணிகளை கொண்டு பயணிகளின் இருக்கைக்கு மேல் இருந்த கம்பியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த ரயில்வே காவல்துறையினர் ராமநாத புரத்தில் ரயிலை நிறுத்தி சடலத்தை மீட்டனர். இதை தொடர்ந்து அவர் யார், எங்கிருந்து வந்தார் என விசாரணை நடத்திவருகின்றனர்.