Home சினிமா ’ஒரே ராத்திரியில் அரசியலில் முன்னுக்கு வந்துவிட்டார் உதயநிதி ஸ்டாலின்’...இயக்குநர் பாக்யராஜ் பகடி...

’ஒரே ராத்திரியில் அரசியலில் முன்னுக்கு வந்துவிட்டார் உதயநிதி ஸ்டாலின்’…இயக்குநர் பாக்யராஜ் பகடி…

நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதிக்கு சமீபத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவி அளிக்கப்பட்டது

தனது மகன் சாந்தனு குறித்துப் பெருமூச்சு விட்ட அதே நேரத்தில் உதயநிதிக்கு இவ்வளவு சீக்கிரத்தில் அவ்வளவு பெரிய பதவியா என்று லைட்டாக தந்து பொறாமையை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் பாக்யராஜ்.

udhay

நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதிக்கு சமீபத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. உதயநிதி தீவிர அரசியலில் இறங்கி ஒருசில மாதங்களே ஆன நிலையில் அவருக்கு இவ்வளவு பெரிய பதவியா? என அரசியல் விமர்சகர்கள் உதயநிதியை விமர்சனம் செய்து வருகின்றனர். கடந்தவாரத்தின் தொலைக்காட்சி விவாதங்கள் பலவற்றில் உதயநிதியே ஊறுகாயாக்கப்பட்டிருந்தார்.

asuraguru

இந்நிலையில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாக உள்ள ‘அசுரகுரு’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பாக்யராஜ், ‘சினிமாவில் வாரிசுகளுக்கு அவ்வளவு எளிதில் வெற்றி வசப்படுவதில்லை. போராடிதான் வெற்றிபெற வேண்டியுள்ளது.  ஆனால் அரசியலில் அப்படியில்லை.  ஒரே இரவில் முன்னுக்கு வந்து விடுகிறார்கள்’ என  கூறினார். 

 

இதன்மூலம் திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வழங்கப்பட்டது குறித்து பாக்யராஜ் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.உதயநிதியும் பாக்யராஜின் வாரிசு சாந்தனு அளவுக்கு கணிசமான தோல்விப்படங்கள் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

தனித்தனியாக அழைத்து மிரட்டல்;வெடிக்கும் பாரதிராஜா

ஒரு துறைக்கு மூன்று சங்கங்கள் உருவானதால் தமிழ் சினிமாவில் பெரும் தலைவலியாக இருக்கிறது. இது மிரட்டல் வரைக்கும் சென்றிருக்கிறது. அதுகுறித்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா...

“எடப்பாடிக்கு ஓட்டு போடாதீங்க” – காலில் விழுந்து கெஞ்சி பிரச்சாரம் செய்யும்…?

கடந்த மாதம் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. கூடவே சீர்மரபினருக்கு 7% உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தது. அப்போதிருந்தே எடப்பாடி தலைமையிலான...

“பெட்ரோல், கேஸ் விலை ஏத்துனா எங்களுக்கு ஓட்டு விழாதா” :அண்ணாமலையின் ஓவர் கான்ஃபிடன்ட்!!

சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஏழ்மையில் தகிக்கும் தமிழகம்.. கமல் ஆதங்கம்!

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
TopTamilNews