நாடு முழுவதும் செல்லுபடியாகும் வகையில் ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு திட்டம் வருகிற ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் செல்லுபடியாகும் வகையில் ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு திட்டம் வருகிற ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தொழிலாளர்கள் தங்கள் பகுதியைவிட்டு வேலைக்காக வேறு பகுதிக்கு செல்கின்றனர். இவர்களுக்கு சொந்த ஊரில்தான் ரேஷன் கார்டு இருக்கும். இதனால், வேலைக்கு சென்ற இடத்தில் இவர்களால் ரேஷன் பொருட்களை வாங்கி பயனைடைய முடியாத நிலை உள்ளது.
இந்த குறையைப் போக்க ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி தங்கள் பகுதியில் பெற்ற கார்டைக் கொண்டு இந்தியாவில் எந்த ஒரு பகுதியில் ரேஷன் பொருட்களை அவர்கள் வாங்க முடியும். ரேஷன் கார்டுகளை ஆதாருடன் இணைத்த பிறகு இந்த திட்டம் செயல்முறைக்கு கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று பேசிய மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், “ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டத்துக்காக பயோ மெட்ரிக் தகவல்களை இணைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்துக்குள்ளேயும் வெளியேயும் ரேஷனில் பொருட்களை வாங்க முடியும். இதற்காக ரேஷன் விநியோகம் முழுவதையும் ஆன்லைன் ஆக்கப்பட்டு வருகிறது. இந்த பணி முடிந்த பிறகு அடுத்த ஆண்டு ஜூன் 1ம் தேதியிலிருந்து இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.
இதன் மூலம் உழைக்கும் தொழிலாளர்கள், தினக்கூலிகள், ப்ளுகாலர் தொழிலாளர்கள் அதிகம் பயன்பெறுவார்கள்” என்றார்