Home தமிழகம் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டியிடம் வீடியோ கால் மூலம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டியிடம் வீடியோ கால் மூலம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்

கோவையில் 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியைத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

கோவை: கோவையில் 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியைத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

கோவை மாவட்டம் வடிவேலாம்பாளையம் பகுதியில் 85 வயதுடைய கமலாத்தாள் பாட்டி என்பவர் வசித்து வருகிறார். பல காரணங்களைக் கட்டி உணவகங்கள் இன்றைய காலகட்டத்தில் உணவுப் பொருள்களின் விலையை சரமாரியாக ஏற்றிக் கொண்டிருக்கையில் கமலாத்தாள் பாட்டி வெறும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார். மேலும் தன்னுடைய காலம் முடியும்வரை ஒரு ரூபாய்க்கு மட்டுமே, தான் இட்லி விற்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஊரடங்கால் நாடே முடங்கிப் போயிருக்கும் இந்த நிலையிலும் வெளியூரில் இருந்து வந்தவர்கள் மற்றும் உள்ளூரில் இருப்பவர்கள் என தினமும் சுமார் 400 பேருக்கு மேல் உணவளித்து கமலாத்தாள் பாட்டி சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

ttn

ஆனால் ஊரடங்கு உத்தரவால் பல மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்து விட்டதால் கமலாத்தாள் பாட்டி சிரமத்துக்கு ஆளாகியுள்ளார். இருப்பினும் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கமலாத்தாள் பாட்டியுடன் வீடியோ கால் மூலம் பேசி அவரிடம் நலம் விசாரித்தார். மேலும் எந்த உதவி வேண்டுமென்றாலும் எப்போதும் தன்னிடம் சொல்லலாம் எனவும், உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுமாறும் பாட்டியிடம் ஸ்டாலின் கூறினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

’’நான் நல்ல பாம்பு ஒரே கடியில் உன்னை காலி செய்துவிடுவேன்’’ மோடி மேடையில் பஞ்ச் அடித்த மிதுன் சக்கரவர்த்தி

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, கடந்த கடந்த 2014ம் ஆண்டில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநிலங்களவை எம்.பி. ஆனார். ஆனால், சாரதா ஊழலில் அவர் பெயரும் அடிபட்டதால்...

தமிழகத்தில் முற்றிலுமாக குறைந்த கொரோனா உயிரிழப்பு!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 11 கோடியே 70 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 25 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய...

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்து நான்கு கட்டங்களாக நாட்டில் ஊரடங்கு போடப்பட்டது. சிறப்பு விமானங்கள், சரக்கு விமானங்கள் தவிர மற்ற உள்நாட்டு...

அடிக்கடி வாய்ப்புண் வருகிறதா? அப்போ இந்த நியூஸை படிங்க!!

வாய்ப்புண் என்பது பெரிய நோய் ஒன்றும் இல்லை. அது பெரிய அளவு எந்த பிரச்சனையும் நமக்கு கொடுக்காது. வாய்ப்புண் வந்தால் நாம் பேசும் போதும் ,சாப்பிடும் போதும் வலியை கொடுக்கக்கூடிய...
TopTamilNews