ஒரு பெண்ணுக்கு இருவர் போட்டா போட்டி: கொலையில் முடிந்த லவ் மேட்டர்

ஒரு பெண்ணுக்காக 2 மாணவர்கள் சண்டை போட்டுக் கொண்டு, கடைசியில் அது கொலையில் சென்று முடிந்தது

கோவை: ஒரு பெண்ணுக்காக 2 மாணவர்கள் சண்டை போட்டுக் கொண்டு, கடைசியில் அது கொலையில் சென்று முடிந்தது. 

கோவை உக்கடம் அடுத்த கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் முரளீதரன். இவர் கோவை நவ இந்தியா பகுதியிலுள்ள, ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.இவர் அதே கல்லூரியில்  2-ம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் பாலாஜி என்ற மாணவரும் அதே பெண்ணை காதலித்துள்ளார்.

இந்த விஷயம் ஒருத்தருக்கொருத்தர் தெரியவர, அது தகராறாக மாறியது. இந்தக் காதல் விவகாரம் தொடர்பாக ரெண்டு பேருக்கும் அடிக்கடி மோதல் வெடித்து வந்திருக்கிறது.ஆனால் முரளீதரனுக்கு அந்த பெண் கிடைக்கவே கூடாது என்றும், அதற்காக அவரை கொலை செய்துவிட வேண்டும் என்றும் பாலாஜி முடிவு செய்தார்.

இந்நிலையில், கெம்பட்டி காலணியில் உள்ள மைதானம் அருகில் முரளீதரன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலாஜி, திடீரென ஒரு கத்தியை எடுத்து முரளீதரன் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் முரளீதரன் ஏராளமான ரத்தம் வெளியேறிய நிலையில் அலறி துடித்தவாறே கீழே சரிந்து விழுந்தார். இதை பார்த்ததும் பாலாஜி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

kovai

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக முரளீதரனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.தகவலறிந்த போலீசார் முரளீதரனின் உடலை மீட்டு தப்பியோடிய பாலாஜியை 2 மணி நேரத்தில் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Most Popular

மதுரை உலைப்பட்டியில் தொல்லியல் ஆய்வு வேண்டும்! – சீமான் கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உலைப்பட்டியில் தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளதால் அங்கு விரிவான ஆய்வு மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

சாதித்த இ.பி.எஸ் அரசு: 3 ஆண்டுகளாக தேசிய விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக தமிழக பொருளாதார வளர்ச்சி விகிதம்!

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருப்பது தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது என்பதை காட்டும் வகையில் உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள்...

மூணாறு நிலச்சரிவில் இதுவரை 8 பேர் பலி !

தென் மேற்கு பருவமழையால் கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில் அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. அதன்படி கேரள மாநிலம் இடுக்கி...

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு ரூ.5,000 நிதியுதவி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு பல்வேறு நிதியுதவியும் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறது. சமீபத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உதவித்தொகை...