Home சினிமா “ஒரு படைப்பாளியா கருத்து சொல்ல சுதந்திரமில்லையா…?” திரௌபதி இயக்குனர் அதிரடி!

“ஒரு படைப்பாளியா கருத்து சொல்ல சுதந்திரமில்லையா…?” திரௌபதி இயக்குனர் அதிரடி!

தர்பார் படத்திற்கு இணையாக எல்லோராலும் பார்க்கப்பட்டு வருகிறது திரௌபதி படத்தின் ட்ரைலர். ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படம் . சாதீய நாடகக்  காதலுக்கு எதிராக பேசுகிற கதை.  பல சர்ச்சைக்குரிய விஷயங்களை படத்தில் காட்டியிருக்கிறார்களாம்.

தர்பார் படத்திற்கு இணையாக எல்லோராலும் பார்க்கப்பட்டு வருகிறது திரௌபதி படத்தின் ட்ரைலர். ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படம் . சாதீய நாடகக்  காதலுக்கு எதிராக பேசுகிற கதை.  பல சர்ச்சைக்குரிய விஷயங்களை படத்தில் காட்டியிருக்கிறார்களாம். இது குறித்து படத்தின் இயக்குநர் மோகன் .ஜி கூறும்போது,

director-mohan-g

“நாங்கள் ஒரு உண்மை சம்பவத்தைதான் கதையாக்கி படமாக எடுத்திருக்கிறோம். 1913- ல் சென்னை பாரிமுனையில் நடந்த கதை இது. கிட்டத்தட்ட  ஒரு வருசத்துக்கு மேல இந்தப்படத்தை எடுத்துக்கிட்டிருக்கோம். மொத்தப்படமும் ‘கிரவுட்  ஃபண்ட்ஸ்’ மூலமாதான் எடுக்கிறோம். அதனால் எப்போ பணம் இருக்கோ அப்போ படப்பிடிப்பு  நடக்கும்.

draupadi-movie

ஒரு வழியா படம் முடிந்து விட்டது.பின்னனி இசை சேர்ப்பு விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. படத்தில் அப்பா பொண்ணுக்குமான உணர்வை பேசியிருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் அவரவர் மனநிலைக்கு ஏற்ப பேசுகிறார்கள். பாரீஸ் கார்னர் அருகிலுள்ள பதிவாளர் அலுவலத்திற்கு பக்கத்தில் நடந்த உண்மைச் சம்பவம் இது. அதனால் புனைவு என்பதில்லாமல் நிஜத்துக்கு நெருக்கமான இடத்திலிருந்து இந்தப் படத்தின் கதையை சொல்ல முயற்சித்திருக்கோம். பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். நாங்கள் நினைத்தபடி படம் சிறப்பாக வந்திருக்கு.

draupadi-movie 20

ஒரு படைப்பாளியா எல்லோருக்கும் கருத்து சொல்கிற உரிமை இருக்கு.நான் பார்த்த கேட்ட சம்பவங்களைத்தான் கதையாக்கியிருக்கிறேன். இதில் வலிய திணிக்கப்பட்ட வசனங்களோ,காட்சிகளோ இருக்காது. ஆனால்,படம் வெளியாகும்போது பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும் என்பது மட்டும் நிச்சயம்” என்கிறார் அழுத்தமாக!

மாவட்ட செய்திகள்

Most Popular

சிவகாசி அருகே ஓடும்காரில் தீ பற்றியதில், ஓட்டுநர் உடல்கருகி பலி

விருதுநகர் சிவகாசி அருகே ஓடும் காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததில், ஓட்டுநர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்துள்ள...

கொரோனாவால் 8 லட்சம் பேர் இறப்பா? அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனாவால் 8 லட்சம் பேர் இறந்ததாக தவறான புள்ளி விவரங்களை தெரிவித்துள்ளார், அவர் சரியான புள்ளி விவரங்களை...

“புதிய சட்டம் வருகிறது; இந்தியாவுல வாட்ஸ்அப்பே இல்லாம ஆக்கிருவோம்” – எச்சரித்த மத்திய அரசு!

மக்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கும் மசோதா (Personal Data Protection bill) இந்தியாவில் அமலானால் வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி கொள்கைகள் சட்டவிரோதமாகும் என்பதால், அவற்றைத் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு வாட்ஸ்அப்...

’வாஷிங்டன் சுந்தரை விட்டுக்கொடுக்க மாட்டோம்’ RCB முடிவு

ஐபிஎல் 2020 சீசன் பரபரப்போடு நடந்து முடிந்தது. எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே மும்பை கோப்பையை வென்றது. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் சுற்று முடிந்ததும் வெளியேற்றப்பட்டது....
Do NOT follow this link or you will be banned from the site!