ஒரு தெருவே இரவில் உணவகமாகும் அதிசயம்! பெங்களூருக்கு வாங்க!

பெங்களூர் கே.ஆர் மார்க்கெட்டிலிருந்து 2 கி.மீ தொலைவில் இருக்கிறது வி.வி.புரம் தெரு.பகலில் அது ஒரு சாதாரண தெரு.மற்ற பெங்களூர் தெருக்களைப் போல பெரிய மரங்கள்கூட இல்லை.மாலை ஆறு மணி ஆனதும் அது புதிய உருவம் எடுக்கிறது. 

பெங்களூர் கே.ஆர் மார்க்கெட்டிலிருந்து 2 கி.மீ தொலைவில் இருக்கிறது வி.வி.புரம் தெரு.பகலில் அது ஒரு சாதாரண தெரு.மற்ற பெங்களூர் தெருக்களைப் போல பெரிய மரங்கள்கூட இல்லை.மாலை ஆறு மணி ஆனதும் அது புதிய உருவம் எடுக்கிறது. 

bangalore

பசித்த பெங்களூர் வாசிகளின்,குறிப்பாக சைவர்களின் வேட்டைகாடு ஆகிவிடுகிறது, இந்த 150 மீட்டர் நீளமும் 50 அடி அகலமும் கொண்ட தெரு.இரவு பதினோரு மணிவரை இயங்கும் உணவகங்கள்.அதன் முன்னால் முண்டியடிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள். இட்லி முதல் பாவ்பாஜி வரை இந்திய சைவ உணவுகள் எல்லாம் இங்கே கிடைக்கின்றன. 

food

இடை இடையே பூமிச்சர்கரை கிழங்கு,கலர்கலரான குச்சி ஐஸ்,பஞ்சு மிட்டாய், சுண்டல் வகையராக்களும் உண்டு.அதுபோலவே நீங்கள் இதுவரை பார்த்தே இராத ஐட்டங்களும் உண்டு.உதாரணத்திற்கு காங்கிரஸ் பன்.இங்கிருக்கும் வி.வி பேக்கரியில் விற்கிறார்கள். சாதாரண பன் தான்.உள்ளே உலர் பழங்கள்,கொட்டைகள் வைத்து இருக்கிறார்கள்,இதே பேக்கரியில் விற்கப்படும் தம்ரூட் அல்வாவும் புகழ்பெற்றது. தோசை கன்னடியரின் விருப்ப உணவு,அதனால் இங்கே சாதாரண கல்தோசையில் தொடங்கி,நீர் தோசா,தாபனகர பென்ன தோசா என்று ஏகப்பட்ட வெரைட்டி காட்டுகிறார்கள். கூடவே கெட்டிச்சட்டினி,தண்ணிச் சட்டினி ,காரச்சட்டினி தருகிறார்கள். சாம்பார் என்கிற பேச்சுக்கே இடமில்லை.அடுத்தது அக்கி ரொட்டி என்கிற அரிசி ரொட்டியும் குருமாவும்.பானிபூரியில் கூட வித்தியாசம் காட்டுகிறார்கள் இங்கே.அதற்கு பெயர் பங்கார் பேட் பேகம் பானி பூரி.வழக்கமான புளித்தண்ணீரும்,காரச்சட்டினியும் இல்லாத பெங்களூர் ஸ்பெஷல் இது.

food

இன்னும் ரஷ்யன் கட்லெட்,உள்ளே நூடுல்ஸ் வைத்துச் செய்த சைனீஸ் சமோசா,ஹனி கேக் என்று என்னென்னவோ பெயரில் ,கலரில், சுவையில் வியாபாரம் சூடுபறக்கிறது.எண்டெய்ன்மெண்டும் உண்டு,உதாரணமாக ‘ ஃபயர் பான் ‘ என்கிற எரியும் பீடா!.உங்கள் கையைவிட அகலமான வெற்றிலையில்,பீடாவை அவர்களே மடித்து,அதன் தலையில் தீயைவைத்து உங்கள் வாய்க்குள் போட்டுவிடுகிறார்கள்.பயப்படாதீர்கள் ஒன்றும் ஆகாது.

food

இன்னொரு வினோத அயிட்டம் ‘ட்ராகன் பிரீத்’!,எதெதையோ கலந்து தருகிறான் கடைக்காரன்.அதை வாங்கி வாயில் போட்டுக்கொள்ளும் இளைஞர்கள் ஊதினால் வாய்குள் இருந்து புகை வருகிறது. கடைசியாக ஒரு இனிப்பான தகவல்.இந்தத் தெருவில் ‘ குல்கந்து ஐஸ்கிரீம்’ என்று ஒரு புது ஐட்டம் விற்கிறார்கள்.

food

ஒரு சிறிய பிளாஸ்டிக் தட்டின் மேல் துண்டு வாழை இலையைப் போட்டு,அதில் இரண்டு ஸ்பூன் ரோஜா குல்கந்தைப் பரப்பி விட்டு,அதன் மேல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட வாழைபழம் தூவி அப்புறம் ஒரு கரண்டி ஐஸ்கிரீம் வைக்கிறார்கள். மீண்டுக் சிலபல பழத்துண்டுகள் தூவித் தருகிறார்கள். வி.வி தெருவுக்குப் போகும் போது இந்த ‘டெஸர்ட்’ நினைவில் இருக்கட்டும்.

Most Popular

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு ரூ.5,000 நிதியுதவி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு பல்வேறு நிதியுதவியும் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறது. சமீபத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உதவித்தொகை...

வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன் தற்கொலை

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன்(54) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்தமாதம் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அவர், வாழ பிடிக்கல்லை என்று கடிதம்...

சகோதரிகள் இடையே சேனல் மாற்றுவதில் பிரச்னை… கண்டித்த தாய்… வேதனையில் உயிரை மாய்த்த மகள்

சகோதரிகள் இடையே டிவி சேனல் மாற்றுவதில் தகராறு ஏற்பட்டதால் தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மூத்த மகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்தவர் செபஸ்டின். இவர்...

‘எந்த கட்சி அரியணை ஏறும் என்பதை மக்களே முடிவு செய்வார்கள்’ முதல்வர் பழனிசாமி காட்டம்

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மும்மொழி கொள்கையை புதிய கல்விக் கொள்கை அறிவுறுத்துவதால், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது சமூக...