Home தொழில்நுட்பம் ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் விற்பனை இந்தியாவில் தொடங்கியது

ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் விற்பனை இந்தியாவில் தொடங்கியது

இந்தியாவில் ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கியது.

டெல்லி: இந்தியாவில் ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கியது.

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சில நாட்களுக்கு முன்னர் அறிமுகம் செய்தது. அதன்படி அந்த ஸ்மார்ட்போனிற்கு இதுவரை முன்பதிவு நடைபெற்று வந்தது. இந்நிலையில், அமேசான் இந்தியா மற்றும் ஒன்பிளஸ் வலைதளத்தில் ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனின் விற்பனை விற்பனை தொடங்கியுள்ளது.

மெக்லாரென் எடிஷன் என்பதால் ஸ்மார்ட்போனை சுற்றி ஆரஞ்சு நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் மெக்லாரெனின் கார்பன் ஃபைபர் கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் பெட்டியில் இருநிறுவனங்களின் வரலாற்றை கொண்டாடும் சிறிய புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆரஞ்சு நிற கார்டு கேபிள், மெக்லாரென் லோகோ, ஸ்பீட் மார்க் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் சிறப்பம்சங்கள்:

– 6.41 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே

கார்னிங் கொரில்லா கிளாஸ் 6

– 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10 என்.எம். பிராசஸர்

அட்ரினோ 630 GPU

– 10 ஜி.பி. ரேம்

– 256 ஜி.பி. மெமரி

ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 9.0

டூயல் சிம் ஸ்லாட்

– 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, 1/2.6″  சோனி IMX519 சென்சார், 1.22μm பிக்சல், OIS, EIS

– 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376K சென்சார், f/1.7, 1.0μm பிக்சல்

– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX 371 சென்சார், f/2.0, 1.0μm பிக்சல்

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி

யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ

– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

– 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ராப் சார்ஜ் 30 ஃபாஸ்ட் சார்ஜிங்

ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன் விலை ரூ.50,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 15 முதல் டிசம்பர் 24ம் தேதிக்குள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி மாத தவணை முறையில் வாங்குவோருக்கு ரூ.2,000 கேஷ்பேக் மற்றும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.1,500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

இதுதவிர அமேசான், ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளங்கள் மற்றும் ஒன்பிளஸ் பிரத்யேக ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்குவோர் பழைய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.3000 வரை கூடுதல் தள்ளுபடியும், இதர சாதனங்களை எக்சேஞ்ச் செய்வோர் ரூ.2,000 வரை தள்ளுபடி பெற முடியும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஐபிஎல்: டெல்லி அணியை வீழ்த்தி ஐதராபாத் சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று 47-வது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ்...

தோஷங்களை போக்கும் பிரதோஷத்தில் சோமசூக்த பிரதட்சணம்!

உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து, தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் சிவப்பெருமான். இவ்வாறு உலகை காத்த உத்தமனான பரமனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம்....

புத்தகத்தில் உள்ளதை திருமா மேற்கோள் காட்டினார்; அவரே சொன்னதுபோல் பாஜக அரசியல் செய்கிறது- கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “குஷ்பு முன்னாள் நடிகை என்பதனால் அவரது கைதை...

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! சமூக வலைதளத்தில் உலாவரும் ரஜினியின் கடிதம்…

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களுடனான சந்திப்பின்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து,...
Do NOT follow this link or you will be banned from the site!