Home சினிமா ’ஒத்தச் செருப்பு’க்காக பார்த்திபனுக்கு ஆஸ்கார் அவார்டு கொடுத்தே தீரவேண்டும்’ அடம்பிடிக்கும் ரஜினி...

’ஒத்தச் செருப்பு’க்காக பார்த்திபனுக்கு ஆஸ்கார் அவார்டு கொடுத்தே தீரவேண்டும்’ அடம்பிடிக்கும் ரஜினி…

எதைச் செய்தாலும் அதை வித்தியாசமாகச் செய்தே தீருவது என்கிற கெட்ட பழக்கத்துக்குச் சொந்தக்காரரான ரா. பார்த்திபன்

சென்னை:  எதைச் செய்தாலும் அதை வித்தியாசமாகச் செய்தே தீருவது என்கிற கெட்ட பழக்கத்துக்குச் சொந்தக்காரரான ரா. பார்த்திபன் தற்போது ‘ஒத்தச் செருப்பு’ என்ற படத்தை எழுதி இயக்கித் தயாரித்து நடித்து நடித்து நடித்து முடித்திருக்கிறார். எதற்கு இத்தனை நடித்து என்று கேட்கிறீர்களா? அதாவது மொத்தப் படத்திலும் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்திருக்கிறார்.

OththaSeruppuSize7

நேற்று இப்படத்துக்கு நடந்த ஆடியோ விழா கமல் புண்ணியத்தில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்க ரஜினி தன் பங்குக்கு பார்த்திபனை வாழ்த்தி 3 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அதில், “என் அருமை நண்பர் பார்த்திபன் ஒரு படைப்பாளி. வித்தியாசமான படைப்பாளி. நல்ல மனிதர். புதிது புதிதாக சிந்திக்ககூடியவர். நல்ல நல்ல படங்களை கொடுத்துள்ளார். அவர் திடீரென்று படம் எடுப்பதை நிறுத்திவிட்டு நடிப்பிற்கு வந்தவுடன் எனக்கு சின்ன வருத்தம் இருந்தது. ஒரு நல்ல படைப்பாளி படம் எடுக்காமல் நடிக்க வந்து விட்டாரே என்று வருத்தம் இருந்தது. 

OththaSeruppuSize7

சமீபத்தில் அவரை சந்தித்தேன். அப்போது நீங்கள் படம் பண்ணனும்னு நான் சொன்னபோது ‘ஒத்தசெருப்பு’ படத்தை பண்ணிட்டு இருக்கேன் என என்னிடம் கூறினார். இது ஒரு வித்தியாசமான முயற்சி. தனி ஒருத்தர் ஒரு படம் முழுவதும் வருவது என்பது வித்தியாசமானது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு பார்த்திபன் தென் இந்தியாவில் முதன்முறையாக இந்தப் படத்தை எடுக்கிறார். அது மட்டுமல்லாமல் பார்த்திபனே கதை எழுதி, நடித்து, இயக்கி, தயாரித்து உள்ளார். இது உலகத்திலேயே முதன்முறை. இந்த முயற்சிக்கு அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். 

OththaSeruppuSize7

ஒரு சின்ன படம் வெற்றி அடைய எனக்கு தெரிஞ்சி நான்கு விஷயங்கள் இருக்கணும். முதலில் அந்தப் படத்தின் கரு வித்தியாசமாக இருக்க வேண்டும். இதுவரை சொல்லாத கதையாக இருக்க வேண்டும். தகவல் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். சிந்திக்க கூடியதாகவும் இருக்க வேண்டும். அடுத்து அந்தப் படம் மினிமம் பட்ஜெட்டில் எடுத்திருக்க வேண்டும். மூன்றாவதாக சினிமாட்டிக்காக இல்லாமல் ரியலிஸ்டிக்காக எடுத்திருக்க வேண்டும். நான்காவது நல்ல பப்ளிசிட்டி பண்ணனும். இது செய்தாலே அந்தப் படம் நல்லா போகும். இது நான்கும் ‘ஒத்தசெருப்பு’ படத்தில் இருக்கு. 

 

நல்ல கதை. படமும் நல்லா எடுத்திருப்பாங்க. பப்ளிசிட்டி சொல்லவே தேவையில்லை. நண்பர் கமல், பாக்யராஜ், இயக்குநர் ஷங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி வெற்றியடைவது போலவே இந்தப் படமும் நல்ல வெற்றி பெற வேண்டும் எனவும் ஆஸ்கருக்கு தேர்வாக வேண்டும் என் மனதார பார்த்திபனுக்கு வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன்.” என அந்த வீடியோவில் பார்த்திபனை மனதாரப் பாராட்டியுள்ளார் ரஜினி.

மாவட்ட செய்திகள்

Most Popular

சந்தேகத்தால் மனைவியை கொன்ற பெட்ரோல் பங்க் ஊழியர் கைது

சென்னை பூந்தமல்லி அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெட்ரேல் பங்க் ஊழியரை போலீசார் கைதுசெய்தனர். சென்னை பூந்தமல்லி ரைட்டர் தெருவை சேர்ந்தவர்...

சாலை விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

தர்மபுரி தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரம் மீது மோதிய விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம்...

கொடிமுடியில் விடிய விடிய பெய்த கனமழை; வீடுகளை சூழ்ந்த வெள்ளநீர்

ஈரோடு ஈரோடு மாவட்டம் கொடுமுடி சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

திருடர்களை சேஸிங் செய்து மடக்கிப் பிடித்த சப் இன்ஸ்பெக்டருடன் கமிஷ்னர் தேநீர் விருந்து!

சென்னையில் இருசக்கர வாகனத்தில் வரும் திருடர்கள், செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டுவருவது தொடர்கதையாகியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களால் உடைமைகளையும், நகைகளையும் இழக்கும் மக்கள், சில நேரம் உயிர்களையும்...
Do NOT follow this link or you will be banned from the site!