Home இந்தியா ஒடிசாவில் சேற்றில் சிக்கிய யானையை பல மணி நேரம் போராடி காப்பாற்றிய கிராம மக்கள்

ஒடிசாவில் சேற்றில் சிக்கிய யானையை பல மணி நேரம் போராடி காப்பாற்றிய கிராம மக்கள்

ஒடிசாவில் சுந்தகர் மாவட்ட கிராமத்தில் சேறு நிறைந்த பள்ளத்தில் சிக்கி தவித்த யானையை வனபாதுகாவலர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மக்கள் இணைந்து பல மணி நேரம் போராடி மீட்டு காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தில் பிர்டோலா கிராமம் உள்ளது. இந்த கிராமம் பாத்கன் வன சரக பகுதியின் அடிவார பகுதியில் அமைந்துள்ளது. காட்டில் யானை உள்ளிட்ட சில விலங்குகள் உணவுக்காக பிர்டோலா கிராம பகுதிக்கு அடிக்கடி வருவது வாடிக்கையான நிகழ்வு. குறிப்பாக யானைகள் கூட்டமாக அதிகளவில் அங்கு வரும்.

யானை கூட்டம்

கடந்த புதன்கிழமை இரவு யானை கூட்டம் உணவுக்காக பிர்டோலா கிராம பகுதிக்குள் வந்துள்ளது. பின் யானை கூட்டம் திரும்பி செல்லுகையில் ஒரு யானை மட்டும் சேறு நிறைந்த பள்ளத்தில் சிக்கி  கொண்டது. நீண்ட நேரம் போராடியும் அதனால் அந்த சேற்றிலிருந்து வெளியே வர முடியவில்லை. இதனால் மற்ற யானைகள் காட்டுக்குள் சென்று விட்டன.

யானை மீட்பு பணி

நேற்று காலையில் யானை சேற்றுக்குள் சிக்கி இருப்பதை பார்த்த பிர்டோலா கிராம மக்கள் இது குறித்து பாத்கன் வனசரக அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படை வீரர்களுடன் வந்த வன பாதுகாவலர்கள் யானையை சேற்றிலிருந்து மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். மக்களும் யானையை மீட்க உதவினர். சுமார் 5 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு யானை சேற்றிலிருந்து மீட்கப்பட்டது. யானையை மீட்கும் வீடியோ தற்போது இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

விபத்தில் இறந்த ராணுவ வீரர் உடல் காஞ்சிபுரம் வந்தடைந்தது!

அசாமில் சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் ஏகாம்பரம் உடல் சொந்த ஊரான காஞ்சிபுரம் வந்தடைந்தது. காஞ்சிபுரம் வெள்ளை...

“கொட்டும் ரத்தத்தோடு ,முனகல் சத்தத்தோடு …”-பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கிடந்த பெண் நாய்

மும்பையின் போவாய் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குள் ‘நூரி’ என்ற எட்டு வயது பெண் நாய் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கிடந்தது .

சென்னை திநகர் நகைக்கடையில் கொள்ளை : திருவள்ளூர் கொள்ளையனின் காதலியிடம் விசாரணை!

சென்னை தி.நகர் நகைக்கடையில் கொள்ளையடித்தது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை தி.நகரில் உள்ள மூசா தெருவில் இயங்கி வந்த உத்தம் நகைக் கடையில்...

“படுக்கையறை காட்சிகளை படம் பிடித்து மிரட்டுகிறார்” -கணவன் மீது மனைவி புகார்

அடமானம் வைத்துள்ள தன்னுடைய மனைவியின் நகைகளை அவர் திருப்பி கேட்டதால் அவரின் அந்தரங்க போட்டோக்களை ஊடகத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டிய கணவன் மீது போலிஸில் புகாரளிக்கப்பட்டது.
Do NOT follow this link or you will be banned from the site!