Home விளையாட்டு ஐ.பி.எல் போட்டிகள் எப்போது... எங்கே? அறிவிப்பு வெளியீடு

ஐ.பி.எல் போட்டிகள் எப்போது… எங்கே? அறிவிப்பு வெளியீடு

இந்தியாவின் கோடை விடுமுறையின் மாபெரும் கொண்டாட்டமாக சில ஆண்டுகளாக மாறிவிட்டது ஐ.பி.எல் போட்டிகள். நீண்ட நேரம் நடக்கும் கிரிக்கெட் போட்டிகள் சோர்வளிக்கும் காலத்தில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் உருவாக்கப்பட்டன. அதை இன்னும் கேளிக்கையுடன் பார்க்கும் வகையில் உருவானதே ஐ.பி.எல்.

சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரூ, ஹைதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகியவற்றை பிரதிநிதிப்படுத்தும் அணிகளை உருவாக்கி உள்ளூர் ரசிகர்களையும் ஈர்த்தது ஐபிஎல் நிர்வாகம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி இருந்து வருகிறார். மேலும் போட்டியின் இடைவெளிகளிலும் ரசிகர்களுக்கான கேளிக்கைகளும் ஏற்பாடு செய்யப்படிருந்தன. சுருக்கமாகச் சொன்னால், நான்கு மணி நேரத்திற்கான திரைப்படம் பார்க்கும் விதமாக வடிவமைக்கப்பட்டது.

IPL

இந்த ஆண்டு திட்டமிட்டப்படி, ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் நடைபெற்றிருக்க வேண்டியது. ஆனால், கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக போட்டிகள் நடத்தப்பட வில்லை. ஆயினும், ரசிகர்களை அனுப்பாமல் வீரர்கள் மட்டும் ஆடும் போட்டிகள் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அரசு அனுமதியளிக்க வில்லை.

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்றும், போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று ஐபிஎல் நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார்.

 

மாவட்ட செய்திகள்

Most Popular

கொரோனா தடுப்பூசியில் 1 லட்சத்தைக் கடந்த மாநிலம் இதுதான்!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளில் பல நாடுகள் களம் இறங்கி விட்டன. இந்தியாவிலும் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

ஸ்டாலின் பாமகவுல இருக்கிறாரா? திமுகவுல இருக்கிறாரா? மாங்காவ விடவே மாட்டேங்கிறார்… வைரலாகும் டாக்டரின் பேச்சு

எடப்பாடி என்று ஓர் ஊர் பெயர் இருக்கக் கூடாதா..? அத நீங்க எடுபுடி, டெட்பாடி என எதுகை, மோனையில் பேசினால், மனநலம் குன்றியவர்கள்தான் இப்படி பேசுவார்கள். உங்க மனநலம் எப்படி...

தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவுக்கு கொரோனா உறுதி!

தேனி மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதால், அவர் தனிமைபடுத்தப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலின் விகிதம் கணிசமாக குறைந்திருக்கிறது. ஆரம்பக்கட்டத்தில் நாளொன்றுக்கு 5000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட...

50 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.04 லட்சம் கோடி நஷ்டம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் புதிய உச்சத்தை தொட்டு விட்டு சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 167 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. அன்னிய முதலீட்டாளர்கள்...
Do NOT follow this link or you will be banned from the site!