Home இந்தியா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இன்று காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்ப வாய்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இன்று காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்ப வாய்ப்பு

ஜெனிவாவில் இன்று நடைபெறும் ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சில் அமர்வில், காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து இந்தியா மீது வீண் பழியை பாகிஸ்தான் சுமத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபை உள்பட பல உலக அமைப்புகளின் கூட்டங்களில் பாகிஸ்தான் எழுப்பியது. மேலும் இந்தியாவுக்கு எதிராக சில பொய்யான ஆதாரங்கள அளித்து கடைசியில் அந்த நாடு அசிகங்கப்படடது. இந்தியா மீதான பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை பெரும்பாலான உலக நாடுகள் கண்டு கொள்ளவில்லை. இருப்பினும், தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உலக அமைப்புகளில் இந்தியா மீது பொய் குற்றச்சாட்டுக்களை கூறுவதை பாகிஸ்தான் வாடிக்கையாக வைத்துள்ளது.

ஷிரீன் மசாரி

இந்நிலையில் ஜெனிவாவில் இன்று நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர் முகமது குரேஷி கடைசி நேரத்தில் அந்த கூட்டத்தில் பங்கேற்பதை ரத்து செய்துள்ளார். அதனால் அவருக்கு பதிலாக அந்நாட்டின் மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மசாரி பங்கேற்க உள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில்

இன்று நடைபெறும் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் மசாரி பேசும்போது, காஷ்மீரில் மனித உரிமைகள் மீறல்கள் நடைபெறுவதாக இந்தியா மீது குற்றச்சாட்டி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தானின் நட்பு நாடுகளான மலேசியா மற்றும் துருக்கியின் ஆதரவு அந்நாட்டுக்கு இருக்காது. மேலும், பாகிஸ்தானின் அனைத்து வானிலை கூட்டாளியான சீனாவும் இந்த கவுன்சிலில் உறுப்பினர் கிடையாது. பாகிஸ்தான் அமைச்சர் இன்று கவுன்சில் இந்தியா மீது குற்றச்சாட்டினால், அதற்கு இந்திய பிரதிநிதி விகாஸ் ஸ்ரூப் (மேற்கு) நாளை தனது பதில் உரையில் தக்க பதிலடி கொடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

பாம்பனில் விற்பனை செய்வதற்காக பதுக்கிய 1,500 மதுபாட்டில்கள் பறிமுதல்

ராமநாதபுரம் பாம்பனில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த ஆயிரத்து 500 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம்...

திமுகதான் நாட்டையும் காப்பாற்றும் என்ற உணர்வில் மக்கள் இருக்கின்றனர்- ஸ்டாலின்

கோவை தனியார் ஹோட்டலில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “இன்னும் ஒரு மாசத்தில் தேர்தல் வர போகின்றது. ஏப்ரலில் சட்டமன்ற தேர்தல் வந்துவிடும். பழனிச்சாமி ஆட்சியை தூக்கி எறிய தயாராக...

ஸ்டாலின் ஓட்டுக்காக வேல் ஏந்தியிருக்கிறார்- சீமான்

நான் உளப்பூர்வமாக வேல் ஏந்தினேன் என்றும் ஸ்டாலின் ஓட்டுக்காக ஏந்தியிருக்கிறார் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கலந்தாய்வு கூட்டத்தில்...

சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது?

நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் 'சூரரைப் போற்று'. கொரோனா பரவலால் இந்த படத்தின் ரிலீஸ் தாமதம் ஆன நிலையில், அக்.30ம் தேதி 'சூரரைப் போற்று'...
Do NOT follow this link or you will be banned from the site!