Home தொழில்நுட்பம் ஐ.டி ஆட்டோமேஷன் துறையில் 600 பேருக்கு வேலை! ஆப்வியூஎக்ஸ் திட்டம்

ஐ.டி ஆட்டோமேஷன் துறையில் 600 பேருக்கு வேலை! ஆப்வியூஎக்ஸ் திட்டம்

ஐ.டி ஆட்டோமேஷன் துறையில் சாதனைகள் படைத்து வரும் ஆனந்த புருஷோத்தமன், ஆப்வியூஎக்ஸ் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 600 பேருக்கு வேலை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐ.டி ஆட்டோமேஷன் துறையில் சாதனைகள் படைத்து வரும் ஆனந்த புருஷோத்தமன், ஆப்வியூஎக்ஸ் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 600 பேருக்கு வேலை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

anand

2015ம் ஆண்டு ஆப்வியூஎக்ஸ் என்ற ஐ.டி ஆட்டோமேஷன் நிறுவனத்தைத் தொடங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஆனந்த புருஷோத்தமன். இவருடைய ஆப்வியூஎக்ஸ் மூலம் நிதி நிறுவனங்கள், சில்லறை விற்பனையகங்கள், மருத்துவத்துறை, எண்ணெய்- எரிவாயு நிறுவனங்கள் என பல துறையைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களுக்குச் சேவை அளித்து வருகிறார். நிறுவனத்தின் எதிர்கால திட்டம் குறித்து அவர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

app viewx

“இந்தியாவில் விற்பனை, வாடிக்கையாளர்களுக்கான விநியோகம் உள்ளிட்டவற்றில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுடன் முழுமையான தகவல் தொழில்நுட்ப தானியங்கி தளத்தைப் புதுமையான முறையில் வழங்கி வருகிறோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் மூலம் 600 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். அடுத்த 6 ஆண்டுகளில் 100 சதவிகித வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதையொட்டி சென்னை, பெங்களூரு, கோவையில் ஆப்வியூஎக்ஸ் நிறுவனத்தின் விரிவாக்கத்தை மேற்கொள்ள உள்ளோம்” என்றார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

காதலன் இறந்த சோகத்தில், இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

சென்னை ஆவடி அருகே காதலன் உயிரிழந்த வேதனையில், ஆந்தராவை சேர்ந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர்...

இந்தியில் கடிதம் : ஆத்திரத்தில் திருப்பி அனுப்பிய எம்.பி சு.வெங்கடேசன்!

மத்திய அமைச்சகத்திடம் இருந்து இந்தியில் வந்த கடிதத்தை மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அமைச்சருக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார். இதற்கு தனது கண்டனத்தையும் பதிவு செய்திருக்கிறார்.

‘செயற்கைக்கோளில் மோடி படம், பகவத் கீதை’ : விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி- 51!

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட்டுக்கான கவுண்ட் டவுன் நேற்று...

இருசக்கர வாகனம் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி!

திருச்சி துவரங்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், அடையாளம் தெரியாத முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி...
TopTamilNews