Home க்ரைம் குற்றம் இந்தியா ஐ.ஏ.ஸ். அதிகாரி ஓட்டிய கார்மோதி பத்ரிகையாளர் பலி! கேரளாவில்!

ஐ.ஏ.ஸ். அதிகாரி ஓட்டிய கார்மோதி பத்ரிகையாளர் பலி! கேரளாவில்!

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் விபத்தை நேரில் பார்த்த சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையி முடிவில், காரை ஓட்டியது வெங்கிட்டராமன்தான் என்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது.

ஸ்ரீராம் வெங்கிட்டராமன், கேரள மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி. மேற்படிப்புக்காக விடுமுறையில் சென்று, பணிக்கு திரும்பியபோது, சர்வே இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு சில நாட்கள்தான் ஆகிறது. நேற்று நள்ளிரவில் தோழி ஒருவருடன் காரில் அதிவேகமாக சென்றதில், கட்டுப்பாட்டை இழந்து பைக்கில் சென்ற பத்ரிகையாளர்மீது மோதியதில், பத்ரிகையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். கை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது வாக்குமூலத்தில் காரை தான் ஓட்டவில்லை என்றும் தனது தோழிதான் ஓட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.
 

Accident Spot

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் விபத்தை நேரில் பார்த்த சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையி முடிவில், காரை ஓட்டியது வெங்கிட்டராமன்தான் என்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, அதிகாரியிடமிருந்து மது நெடி அடித்ததாக, அவரை பரிசோதித்த டாக்டர் கூறினாலும், போலீசார் கேட்டுக்கொள்ளாததால், ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ரத்த சோதனை நடத்தப்படவில்லை என்று சொல்லிவிட்டார். உயரதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மட்டும் பணியில் இருக்கும் போலீசாருக்கு சட்டென அடிப்படை நடைமுறைகூட மறந்துவிடுகிறது. இனி பத்ரிகையாளர்கள் சங்கம் இறந்தவருக்காக நிதி திரட்டும், ஐ.ஏ.எஸ். அதிகாரி 2000 ரூபாய் ஃபைன் கட்டிவிட்டு டூட்டிக்கு போய்விடுவார்! எவ்வளவு கேஸைப் பார்த்திருப்போம்!
 

மாவட்ட செய்திகள்

Most Popular

எந்த துறையிலும் ஜொலிப்பேன்! வருவாய் துறையில் வருவாய் ஈட்டிய பீலா ராஜேஷ்

தமிழக சுகாதாரத் துறை இருந்தவராக இருந்த பீலா ராஜேஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக, புதிய பங்களா கட்டியதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில்...

பஞ்சா டீம் முதலில் பேட்டிங்

ஐபிஎல் திருவிழாவில் பிளே ஆஃப் சுற்றை நோக்கி ஒவ்வோர் அணியும் கடும் ஆட்டத்திறனை வெளிப்படுத்தி ஆடி வருகிறார்கள். இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியை எதிர்கொள்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்...

அவருக்கு வயசு அதிகம்; அதனால் அந்த இளைஞருடன் தான் வாழ்வேன்.. இளம்பெண் பிடிவாதத்தால் குழந்தைகளுடன் கணவன் கண்ணீர்

திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் குமரவேல்(44) என்பவர் தனது குழந்தைகளுடன் வந்து, மனைவி ஆஷா மெர்சியை காணவில்லை என்று புகார் அளித்தார். புகாரின் பேரின் விசாரணை மேற்கொண்டதில் அந்த இளம்பெண்,...

கொரோனாவால் களை இழந்த கூடலூர் புத்தரிசி திருவிழா

நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபெற்ற பழங்குடியின மக்களின் புத்தரிசி திருவிழாவில், கொரோனா காரணமாக குறைந்த அளவிலான மக்கள் கலந்துகொண்டு, பாரம்பரிய முறைப்படி திருவிழாவை நடத்தினர்.
Do NOT follow this link or you will be banned from the site!