Home ஆன்மிகம் ஐப்பசி மாத மகர ராசி பலன்கள்

ஐப்பசி மாத மகர ராசி பலன்கள்

மகர ராசிக்கு ஜோதிட அடிப்படையில் ஐப்பசி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

மகர ராசிக்கு அதிபதியாக சனி விளங்குவதால் எதிலும் சாமர்த்தியம் நிறைந்து இருக்கும். எடுக்கின்ற வேலைகளில் கடின உழைப்பு இருக்கும்.

எந்த ஒரு காரியத்திலும் நிதானத்துடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர் இடையே பாசம் மேலோங்கி இருக்கும்.உங்கள் ராசிக்கு 10 –ல் சூரியன், சுக்கிரன்; 10, 11 –ல் புதன்; 11-ல் குரு; 12-ல் சனி; 1 –ல் செவ்வாய், கேது; 7-ல் ராகு உள்ளனர்.

akaram

ஐப்பசி மாத ஆரம்பத்தில் மகர ராசியின் யோகாதிபதிகளான புதனும் சுக்கிரனும் பத்தாம் இடத்தில் இணைந்திருப்பது மேன்மைகளை தரும் ஒரு அமைப்பு என்பதால் இந்த மாதம் குடும்பத்தில் சந்தோஷப்படக்கூடிய நிகழ்ச்சிகளும்,தொழிலில் பணவரவு மற்றும் பொருளாதார மேன்மைகளும் உள்ள மாதமாக இருக்கும்.

எட்டுக்குடைய சூரியன் நீசமாவதால் கடந்த காலங்களில் நடந்த பிரச்னைகளில் இருந்து நீங்கள் மீண்டு வரும் மாதமாகவும் இது இருக்கும்.

உங்களில் சிலருக்கு விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இளைய பருவத்தினர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள்.

makaranj

கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும். ஆனால், மாதப் பிற்பகுதியில் சக கலைஞர்களால் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்.

makaram

மாணவ,மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள் : 2,5,6

அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய்,புதன்,வெள்ளி

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

சந்திராஷ்டம நாள்கள்: நவ: 2, 3

பரிகாரம்:  தினசரி விநாயகர் அகவல் பாராயணம் செய்வதும் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று வருவதும் மிக சிறந்த பரிகாரம் ஆகும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ராஜேந்திரபாலாஜிக்கு செக் வைத்த முதல்வர்!

மாஃபா என்ற நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபர் பாண்டியராஜன், பாஜகவின் இணைந்து அரசியில் வாழ்க்கையை ஆரம்பித்தவர், விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது அதில் இணைந்து, 2009ல் தேமுதிக சார்பில் விருதுநகரில் களமிறங்கி...

முடிவுக்கு வந்த இழுபறி : திமுக கூட்டணியில் இறுதியாகும் தொகுதிகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே எஞ்சியுள்ளது. வரும் 15ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கவிருப்பதால் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தொகுதிகளை பிரித்து வழங்குவதில்...

கழட்டிவிட்ட காதலி -காண்டான காதலன் -மாடி வழியாக வந்து செஞ்ச வேலை.

தனது காதலியை வேறொருவருக்கு நிச்சசயம் செய்ததால் காண்டான அவரின் காதலன் அவரையும் அவரின் தாயாரையும் கத்தியால் குத்தினார் . உத்திரபிரதேச...

“எப்படியும் ஜெயிக்க போறதில்லனு பழனிசாமி அடிச்சி விடுறாருங்க” – டிடிவி தினகரன் நக்கல்

நான் எப்போதும் மாங்காய் புளித்ததா, வாய் புளித்ததா என்று பேச மாட்டார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஏற்கெனவே கூறியுள்ளார். அதிமுக செய்யும் நல்லதையும் பேசுவேன்; கெட்டதையும் விமர்சிப்பேன்...
TopTamilNews