Home ஆன்மிகம் ஐப்பசி மாத தனுசு ராசி பலன்கள்

ஐப்பசி மாத தனுசு ராசி பலன்கள்

தனுசு ராசிக்கு ஜோதிட அடிப்படையில் ஐப்பசி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

தனுசு ராசிக்கு அதிபதியாக குரு இருப்பதால் மிகவும் நேர்மையானவர்களாகம்,நல்ல உள்ளம் படைத்தவர்களாகவும் நீங்கள் விளங்குவீர்கள்.உங்கள் ராசிக்கு 11 –ல் சூரியன், சுக்கிரன்; 11, 12 –ல் புதன்; 12-ல் குரு; 1-ல் சனி; 2 –ல் செவ்வாய், கேது; 8-ல் ராகு உள்ளனர்.

மாதம் முழுவதும் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடம் வலிமையாக இருப்பதால் தனுசு ராசிகாரர்களுக்கு இது பொருளாதார நன்மைகளைத் தரும் மாதமாக இருக்கும்.

dhanusu

சூரியன் நீசத்தில் இருப்பதால் அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.

நீண்ட காலமாக முடியாமல் இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் சாதகமான முடிவுக்கு வருதல் இப்போது நடக்கும். கலைஞர்களுக்கு சிறப்பு நற்பலன்கள் இந்த மாதம் உண்டு.

thanusuhjk

வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போவது மேன்மை தரும்.வீண் ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம்.

குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும். மற்ற கலைஞர்களிடம் அனுசரனையாக நடந்துகொள்வது நல்லது. உங்களைப் பற்றிய வதந்திகள் பரவினாலும், பொருட்படுத்தாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

thaniusu

மாணவ, மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள் : 1,3,6,9

அதிர்ஷ்டகிழமைகள் : ஞாயிறு , செவ்வாய், வியாழன்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள்

சந்திராஷ்டம நாட்கள்  : அக் 31, நவ: 1

பரிகாரம் : அருகில் உள்ள ஜீவ சமாதிகளுக்கு சென்று வழிபாடு செய்வது சகல நன்மைகளையும் வழங்கும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஆண்மையை அதிகரிக்க உதவும் அஸ்வகந்தா!

ஆண்மை குறைபாடு என்றாலே தாம்பத்திய பிரச்னை என்று அர்த்தம் ஆகிவிட்டது. விறைப்புத் தன்மை குறைபாடு, விந்தணு சீக்கிரம் வெளிப்படுதல் என்று பல்வேறு பிரச்னைகள் இதில் அடங்கியுள்ளது.

செயற்கை ஆக்சிஜன் உதவியில்லாமல் சுவாசிக்க தொடங்கினார் சசிகலா

கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சசிகலா செயற்கை ஆக்சிஜன் உதவியில்லாமல் சுவாசிக்க தொடங்கினார். சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிறைக்கு சென்ற சசிகலாக்கு...

கார்ப்பரேட் முதலாளிகளை குளிர்விக்க விவசாயிகளை உயிர்பலி கொடுக்க துணிந்துவிட்டார் மோடி – கருணாஸ் எம்எல்ஏ

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தெய்வீக பரப்புரைக்காக மதுரை வந்த நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் உசிலம்பட்டி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அழகு முதல் ஆண்மை வரை… கற்றாழையின் டாப் பயன்கள்!

நம் வீட்டிலேயே வளர்க்கக் கூடிய எளிய தாவரம் கற்றாழை. ஆரோக்கியம் முதல் அழகு வரை அது அள்ளித்தரும் பலன்கள் ஏராளம். வாரத்துக்கு 2-3 முறை கற்றாழையை உட்கொண்டு வந்தால் உடலில்...
Do NOT follow this link or you will be banned from the site!