Home ஆன்மிகம் ஐப்பசி மாத கன்னி ராசி பலன்கள்

ஐப்பசி மாத கன்னி ராசி பலன்கள்

கன்னி ராசிக்கு ஐப்பசி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

கன்னி ராசிக்கு அதிபதியாக புதன் விளங்குவதால் நீங்கள் எந்த  ஒரு செயலிலும் நிதானத்துடனும், பொறுமையுடனும் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் ராசிக்கு 2 –ல் சூரியன், சுக்கிரன்; 2, 3 –ல் புதன்; 3-ல் குரு; 4-ல் சனி; 5-ல் செவ்வாய், கேது; 11-ல் ராகு உள்ளனர்.

kannighyu

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் புதன், சுக்கிரன் இருவரும் தனஸ்தானத்தில் இணைந்து வலுவான நிலையில் இருப்பதால் ஐப்பசி மாதம் உங்களை பொருத்தவரையில் விசேஷமான மாதம்தான்.

தனாதிபதி சுக்கிரன் வலுவாக இருப்பதால் எதிர்பாராத பணவரவுகளும், வேலை,தொழில்,வியாபாரம் போன்றவற்றில் நல்ல வருமானங்களும் இருக்கும்.

திருமணம் போன்ற சுபகாரிய அமைப்பும் இந்த மாதம் உண்டு. பெண்களால் லாபம் இருக்கும். அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்ஷம் நிலவும்.

பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். கணவன், மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும். மொத்த வியாபாரிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு.

kannighjk

சிலருக்கு ஆன்மீகச் சுற்றுலா உண்டு. எந்த ஒரு விஷயத்திற்கும் அடுத்தவர்களை நம்பாமல் கூடுமானவரை அனைத்தையும் உங்களின் மேற்பார்வையில் நேரிடையாகச் செய்வது நல்லது.

ஆறாமிடத்தில் செவ்வாய் அமர்வதால் எதிர்ப்புகளை ஜெயிப்பீர்கள். கடன் தொல்லைகள் இருக்காது. நடுத்தர வயதுக்காரர்கள் உடல்நலத்தில் கவனம் வைக்க வேண்டும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழும் கௌரவமும் அதிகரிக்கும். ரசிகர்களிடம் உங்கள் செல்வாக்கு கூடும். சிலருக்கு விருதுகளும் பட்டங்களும் கிடைக்கும்.

kannijkll

மாணவ,மாணவியர்க்கு படிப்பில் இருந்த தேக்க நிலைமாறும். பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். ஆசிரியர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கூறி, பாராட்டு பெறுவீர்கள். ஆனாலும், நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட எண்கள் : 2,3,5

அதிர்ஷ்ட கிழமைகள் : புதன் மற்றும் வெள்ளி

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள்

சந்திராஷ்டம நாள்கள்: நவ: 20,21

பரிகாரம்: அருகில் இருக்ககூடிய காவல் தெய்வத்தினை வழிபாடு செய்வது உங்கள் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

காஷ்மீரில் கல் வீசுதல், பந்த் போன்ற நடவடிக்கைகளில் இப்பம் யாரும் ஈடுபடுவதில்லை.. மேஜர் ஜெனரல் தகவல்

வடக்கு காஷ்மீரில் கல் வீசுதல் மற்றும் பந்த் போன்ற நடவடிக்கைகளில் இப்போது யாரும் ஈடுபடுவதில்லை என்று மேஜர் ஜெனரல் எச்.எஸ். ஷஹி தெரிவித்தார். காஷ்மீரின் சிறப்பு...

திருமண பாக்கியம் அருளும் ஆண்டாள் ஸ்லோகம்!

ஆண்டாள் நாச்சியார் பூமாதேவியின் அவதாரமாக பார்க்கப்படுகிறார். 12 ஆழ்வார்களில் ஒரே பெண் இவர்தான். மிகச்சிறந்த பெருமாள் பக்தை. தோட்டத்தில் பச்சிளம் குழந்தையாக பெரியாழ்வாரால் கண்டுபிடிக்கப்பட்டவர் ஆண்டாள். மிகச்சிறந்த விஷ்ணு பக்தையாக...

நிச்சய உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும் சில உணவுகள்!

ஆரோக்கியமான உணவுகள் எது என்று ஓரளவுக்கு தெரிந்து வைத்துள்ளோம். ஆரோக்கியமில்லாத உணவு, சாப்பிட்டால் நிச்சயம் உடல்நல குறைபாட்டை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ள சில உணவுகள் பற்றித் தெரியுமா... தினமும்...

ஏப்ரல் 6 மிகவும் பரபரப்பான தேர்தல் நாளாக அமையும்.. ஒரே நாளில் 475 சட்டமன்ற, 2 எம்.பி. தொகுதிகளுக்கு தேர்தல்

ஏப்ரல் 6 மிகவும் பரபரப்பான தேர்தல் நாளாக அமையும். ஏனென்றால் அன்று புதுச்சேரி மற்றும் 4 மாநிலங்களில் மொத்தம் 475 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 3 எம்.பி. தொகுதிகளுக்கு தேர்தல்...
TopTamilNews