ஐபிஎல் தொடரை இலங்கையில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-க்கு கடிதம்

ஐபிஎல் தொடரை இலங்கையில் நடத்த விருப்பம் தெரிவித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

கொழும்பு: ஐபிஎல் தொடரை இலங்கையில் நடத்த விருப்பம் தெரிவித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 13-வது பதிப்பை நடத்த இலங்கை முன்வந்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பிசிசிஐ காலவரையின்றி ஐபிஎல் தொடரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2020 ஐபிஎல் தொடர் மார்ச் 29 முதல் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்பட்டது. இப்போது மே 3 வரை இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் ஐபிஎல் தொடர் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு முன் கொரோனா வைரஸ் பரவல் தங்கள் நாட்டில் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும் என்று நம்புவதால் ஐபிஎல் போட்டியை இலங்கையில் நடத்த விருப்பம் தெரிவித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளது.

sri lanka

“ஐபிஎல் தொடரை ரத்து செய்தால் பி.சி.சி.ஐ மற்றும் அதன் பங்குதாரர்களுக்கு 500 மில்லியனுக்கும் அதிகமாக நஷ்டமாகும். எனவே வேறொரு நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்துவதன் மூலம் அந்த இழப்புகளைக் குறைக்கலாம். இலங்கையில் ஐபிஎல் போட்டிகள் நடந்தால், இந்திய பார்வையாளர்களுக்கு டிவியில் கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது எளிது. இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல் விளையாடியதால் இதை கூறுகிறோம். எங்கள் திட்டத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலளிக்கும் வரை நாங்கள் காத்திருக்கிறோம்” என்று எஸ்.எல்.சி தலைவர் ஷம்மி சில்வா உள்ளூர் நாளிதழான லங்கதீபாவிடம் பேட்டியில் தெரிவித்தார்.

இதற்கு முன் இதுபோன்ற இரண்டு சந்தர்ப்பங்களில் ஐ.பி.எல் தொடர் இந்தியாவுக்கு வெளியே மாற்றப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக 2009-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. 2014-ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல்களால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஐபிஎல் தொடர் முதல் இரண்டு வாரங்களுக்கு நடத்தப்பட்டது.

“இந்திய வாரியம் இங்கு போட்டியை விளையாட ஒப்புக் கொண்டால், மருத்துவ நிபுணர்களின் தேவைகள் மற்றும் பரிந்துரைகளுக்கு ஏற்ப வசதிகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். இது இலங்கை கிரிக்கெட்டிற்கும் கணிசமான வருமான ஆதாரமாக இருக்கும்என்று சில்வா கூறினார். இந்தியாவின் 13,000-க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு வழக்குகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இதுவரை 230 பேர் மட்டுமே இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இலங்கையில் விதிக்கப்பட்ட ஊரடங்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கை விட கடுமையானது. கிட்டத்தட்ட நான்கு வாரங்களுக்கு அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் நாட்டிலிருந்து கொரோனா வைரஸை அகற்றுவது குறித்து இலங்கை அரசு நம்பிக்கையுடன் உள்ளது. அவர்கள் இலக்கை அடைந்தால் இலங்கையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற  வாய்ப்புள்ளது. ஆனால் இவ்வளவு பெரிய போட்டியை நடத்த அந்நாட்டு அரசாங்க அனுமதி தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Popular

விருதுநகர் பட்டாசு ஆலையில் 25க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

விருதுநகரில் தியாகராஜபுரம் அருகில் ராஜகண்ணு பட்டாசு தொழிற்சாலையில் 25க்கும் மேற்பட்ட பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்கபட்டுள்ளனர். கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றன. குழந்தை தொழிலாளர்களாகவும், கூலிக்கு அடிமைகளாகவும்...

வாடகை போலீஸ் ட்ரஸ்ஸை மாட்டினார் – லஞ்சம் வாங்கும்போது ஒரிஜினல் போலீசிடம் மாட்டினார்- போலீஸ் அதிகாரியாக நடித்து மாமூல் வாங்கிய பெண்.

டெல்லியில் ஒரு பெண், தான் டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணி புரியும் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி பலரிடம் போலியான சலான்களை கொடுத்து பணம் வசூல் செய்துள்ளார் . டெல்லியில் இரண்டு...

கொரோனா தொற்று உறுதியானதால் ஞானவேல்ராஜா இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை!

பண மோசடி வழக்கில், சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ஆகஸ்ட் 27வரை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. 8 ஆம் தேதிக்குப் பின்னர் ஞானவேல்ராஜாவுக்கு கொரோனா...

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை முழுமையாக அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வரும் 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்குதடையின்றி இ-பாஸ் அனுமதி கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ்...
Do NOT follow this link or you will be banned from the site!