Home விளையாட்டு ஐசிசி முடிவுகளை எதிர்க்கும் பிசிசிஐ.. கங்குலி வரவால் ஏதேனும் ஆபத்தா?

ஐசிசி முடிவுகளை எதிர்க்கும் பிசிசிஐ.. கங்குலி வரவால் ஏதேனும் ஆபத்தா?

ஐசிசி நடத்திய உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த எதிர்ப்பு முடிவுகள் கங்குலி வரவால் ஏதேனும் ஆபத்து நேரிடுமா? என எண்ணப்படுகிறது.

ஐசிசி நடத்திய உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த எதிர்ப்பு முடிவுகள் கங்குலி வரவால் ஏதேனும் ஆபத்து நேரிடுமா? என எண்ணப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் கவுன்சில் வாரியத்தின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மேற்கு வங்க கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சௌரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர் வருகிற 23ம் தேதி முதல் பதவிக்கு வருவார் என கூறப்பட்டது.

ganguly

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது உறுப்பினர்களுக்கு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தற்போதிருக்கும் அணிகளுக்கு கூடுதலான தொடர்கள் வழங்குவதற்காக முடிவு செய்யப்பட்டது. மொத்தம் ஆறு நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அடுத்த 8 ஆண்டுகளில் இரண்டு ஒரு நாள் உலக கோப்பை, 4 20 ஓவர் உலக கோப்பை என மொத்தம் ஆறு ஐசிசி தொடர்கள் நடைபெற முன்னமே முடிவு செய்யப்பட்டிருந்தன. தற்போது மேலும் இரண்டு ஐசிசி தொடர்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்மூலம் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் விளம்பரங்கள் என ஐசிசி-க்கு ஏராளமான வருவாய் வந்து சேரும். இதில் இந்திய அணி பங்கு பெற்றால், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளில் கிடைக்கும் வருவாயை ஐசிசியிடம் பிசிசிஐ பகிர்ந்து பெறவேண்டும். ஆனால், அந்த இடைப்பட்ட காலங்களில் ஐசிசி தொடர் அல்லாமல் தனிப்பட்ட இரு நாடுகளுக்கிடையேயான தொடரில் இந்திய அணி பங்கேற்றால் வருவாய் முழுவதும் பிசிசிஐக்கு கிடைக்கும். 

rahul johri

இந்நிலையில் பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ஐசிசி எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியிருக்கிறார். அவர் குறிப்பிடுகையில், இந்த முடிவிற்கு தற்போது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஆனால் இது குறித்து முழுமையான முடிவுகளை அடுத்ததாக வரவிருக்கும் தலைவர் தான் எடுக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு இருந்தார்.

அடுத்த தலைவராக கங்குலி நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் தொடர்ந்து ஐசிசியின் முடிவுகளை எதிர்த்து வந்தால், ஐசிசி பார்வையிலிருந்து பிசிசிஐ புறக்கணிக்கப்பட வாய்ப்புகள் நேரிடலாம். இவற்றை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் இருக்க  நன்கு ஆலோசித்து முடிவு எடுக்கும் கட்டாயத்தில் கங்குலி இருக்கிறார்.

-vicky

Most Popular

வேளாங்கண்ணி ஆலய நிலத்தை அபகரித்த புகாரில் திமுக பிரமுகர் கைது; அதிமுக அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புனித வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சொந்தமான நிலம் உட்பட அரசு நிலங்களை போலீ ஆவணங்கள் மூலம் அபகரித்துக்கொண்டதாக எழுந்த புகாரின்பேரில் திமுக பிரமுக தாமஸ் ஆல்வா எடிசன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில்,...

எஸ்பிபி உடல்நிலையில் திடீர் பின்னடைவு – மருத்துவமனை விரைந்தார் கமல்ஹாசன்!

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சற்றுமுன் அறிக்கை வெளியிட்டது. அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு கண்காணித்து வருவதாகவும், கடந்த 24...

விவசாயிகள், மீனவர்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிர்ப்பு: 28 முதல் நாடு தழுவிய பிரச்சார இயக்கம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள், மீனவர்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற 28 ஆம் தேதி முதல் நாடு தழுவிய பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது என்று நாகையில்...

ஆகஸ்ட் மாத இறுதியில் 5 பேரில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

புதுச்சேரியில் ஆகஸ்ட் மாத இறுதியில் 5 பேரில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் விஞ்ஞானிகள் செப்டம்பர்...
Do NOT follow this link or you will be banned from the site!